ட்ரோன் திருடன் என நினைத்து.. தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், ட்ரோன் திருடன் என்று நினைத்து தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் ட்ரோன் திருட்டு தொடர்பாக அச்சம் அதிகரித்துள்ளது. அதாவது ட்ரோன்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு, பின்னர் ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு நடப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன. இது வெறும் கற்பனை கதைதான், அப்படியான திருட்டுக்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று காவல்துறையினர் சொன்னாலும், மக்களிடையே அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஃபதேபூரைச் சேர்ந்த ஹரிஓம் எனும் இளைஞரை, ட்ரோன் திருடன் என்று கூறி உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஹரியோம் மனநலம் பாதிக்கப்பட்டவர். தண்டேபூர் ஜமுனாபூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்து கொண்ட கும்பல், ட்ரோன் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டி சரமாரியாக தாக்கியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது, இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான ஹரிஓம் ராகுல் காந்தி என்று மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். ஆனால், அவரை சூழ்ந்துக்கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஹரிஓம்-ஐ டிரோன் திருடன் என்று தவறாக நினைத்து அடித்து கொன்றிருக்கிறார்கள். தாக்குதல் நடந்த ஏரியா மிகவும் பதற்றமான பகுதியாகும். தாக்குதல் நடத்துவதற்கு முன்தினம் இரவு, இரண்டு நபர்கள் அனுமதியின்றி ட்ரோனை இயக்கியிருந்தனர். இதனால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர். மரப்பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தும் இருவர், விளையாட்டுக்காக ட்ரோனை இயக்கி பார்த்திருந்தார்கள்.
ட்ரோன் காரணமாக மக்கள் அச்சமடைந்திருந்தாலும், எந்த பொருட்களும் திருடு போனதாக புகார்கள் எதுவும் வரவில்லை. இப்படி இருக்கையில்தான் அடுத்த நாள் ஹரிஓம் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியிருக்கின்றனர்.
ரேபரேலியில் மட்டுமல்லாது மதௌகர் மற்றும் ராம்பூராவிலும் இதேபோன்று ட்ரோன் திருடர்கள் பற்றிய அச்சம் இருக்கிறது. இந்த பகுதியில் வியாபாரத்திற்காக செல்பவர்கள் மீது உள்ளூர் மக்கள் சிலர் தாக்குதலை நடத்துகின்றனர். குறிப்பாக பாத்திரங்களை விற்பவர்கள், போர்வைகளை விற்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர் சம்பவங்களையடுத்து பொதுமக்களிடம் காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகளை பரப்புவது, வியாபாரிகள் மீது கும்பல் தாக்குதலை நடத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
இருப்பினும், கிராமப்புறங்களில் மக்களிடையே அச்சம் குறையவில்லை. எட்டாவாவில் மக்கள் இரவு முழுவதும் மாறி மாறி விழித்திருக்கின்றன. தியோரியாவில், குழந்தைகள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல்லியாவில், விவசாயிகள் தங்கள் வானத்தில் ஹெட் லைட்டுகளை இரவு முழுவதும் ஆன் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications