யோகி அரசை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியதா.. இணையத்தில் வைரலாகும் புது தகவல்
யோகி அரசை உலக சுகாதார மையம் பாராட்டியதா?
லக்னோ: உலக சுகாதார நிறுவனமே யோகியின் உபி அரசை பாராட்டி இருக்கிறதாம்.. கொரோனா டெஸ்ட் செய்வதில் உத்திர பிரதேச மாநிலம் சிறப்பாக கையாண்டதாலேயே உலக சுகாதார மையம் பாராட்டியதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடமாநிலங்களில் தொற்று அதிகமாகி வருகிறது.. அந்த வகையில் உபியிலும் 2வது பரவலின் தாக்கம் விஸ்வரூமெடுத்துள்ளது.
இதனால் ஆஸ்பத்திரிகள் நிறைந்து வழிகின்றன.. படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. ஆக்சிஜன் தட்டுப்பாடும் உள்ளது.. சுடுகாடுகளில் பல மணி நேரம் பிணங்களை வைத்து கொண்டு காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

முதல்வர்
உபியில் நிறைய உயிரிழப்பு ஏற்பட ஆக்சிஜன் தட்டுப்பாடே என்ற பரவலான காரணமும் சொல்லப்படுகிறது.. ஆனால், இதை உபி மாநில முதல்வர் யோகி மறுத்திருந்தார்.. யாராவது இப்படி தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

சடலங்கள்
அதேபோல, ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதப்பதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காகவே இப்படி செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த அளவுக்கு உபி அரசு பல்வேறு சர்ச்சையில் சிக்க வரும் நிலையில், ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது..

உபி அரசு
உபி அரசை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியதாம்.. கொரோனா தொற்றை சரி செய்ய வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் செய்யும் அம்மாநில அரசின் திட்டத்தை உலக சுகாதார மையம் பாராட்டியதாக அந்த வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பாராட்டு
அதுமட்டுமல்ல, 20 கோடி மக்கள் தொகை கொண்ட உபி மாநிலத்தில், கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருவதாகவும், அதற்கு காரணமே இப்படி வீடு வீடாக சென்று கொரோனாவை கட்டுப்படுத்திய யோகிதான் என்றும் பாராட்டியுள்ளது.. ஆனால், இது ஒரு போலி செய்தி என்பது பிறகுதான் தெரியவந்தது..

பொய் செய்தி
உபி மாநில அரசாங்கத்தை உலக சுகாதார மையம் பாராட்டவே இல்லையாம்.. இதுபோன்ற தேவையில்லாத செய்திகளை இணையத்தில் பரப்பப்பட்டு வருவதாகவும், தொற்று மோசமாக பரவி வரும் சூழலில் இதுபோன்ற வதந்திகளையும், போலியான செய்திகளையும் இணையத்தில் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications