‛‛கின்னஸ் சாதனை’’.. 22.23 லட்சம் தீபங்களால் மிளிறிய சராயு நதி! காண கண்கோடி வேண்டும்.. அசத்திய யோகி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையொட்டி இன்று வெகுவிமரிசையாக தீபஉற்சவ விழா நடந்தது. ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போது உத்தர பிரதேச மாநிலம் சராயு நதிக்கரையில் தீப உற்சவ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த தீப உற்சவ நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் இன்று சராயு நதிக்கரையில் தீப உற்சவ விழாவுக்கு பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது 7 வது தீப உற்சவ விழாவாகும். இந்த விழாவில் ஒரே நேரத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி சாதனை படைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று இரவு சராயு நதிக்கரையில் தீப உற்சவ விழா தொடங்கியது. யோகி ஆதித்யநாத் தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தீபங்கள் ஏற்றப்பட்டன. ஒரே நேரத்தில் 22 லட்சத்து 23 ஆயிரம் தீபங்கள் சராயு நதிக்கரையை சுற்றி ஏற்றப்பட்டது. இதனால் அந்த நதிக்கரை தீபஒளியில் மின்னியது. இந்த தீபங்களை 25 ஆயிரம் தன்னார்வலர்கள் ஏற்றினர். கடந்த முறையை விட கூடுதலாக 6.47 லட்சம் தீபங்கள் அதிகமாக இயறப்பட்டது.
இதையடுத்து ட்ரோன் மூலம் அங்கு ஏற்றப்பட்டு இருந்த தீபங்கள் எண்ணப்பட்டன. அப்போது 22 லட்சத்த 23 ஆயிரம் தீபங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த தீப உற்சவ விழா கின்னஸ் சாதனை படைத்தது. கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்று கொண்டார். அதன்பிறகு விழாவை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைக்க உதவியவர்களுக்கு அவர் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
#WATCH | Uttar Pradesh: Deepotsav celebrations underway in Ayodhya.#Diwali pic.twitter.com/AvX4I9Oigt
— ANI (@ANI) November 11, 2023
இந்த தீப உற்சவ விழா என்பது உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தான் தொடங்கப்பட்டது. கடந்த 2017 ம் ஆண்டில் அயோத்தியில் 1.71 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது. 2018 ல் 3.01 லட்சம் தீபங்களும், 2019ல் 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது. அதன்பிறகு 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், 2022ல் 15.76 லட்சம் தீபங்களும் இயற்றப்பட்டது. இநு்நிலையில் தான் இந்த ஆண்டு 22.23 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த தீப உற்சவத்தை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட வெளிமாநில மக்கள், 54 நாடுகளின் தூதர்கள் ரசித்தனர். 100க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications