பாஜக அசரலியே.. புற்றுநோய், ரத்த கொதிப்பு இருக்கா? மாட்டுக்கொட்டகையில் படுத்தாலே போதும்.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ : மாட்டுக்கொட்டகையிலேயே தங்கி, அங்கேயே படுத்து தூங்கி.. மாட்டுக் கொட்டகையை தினமும் சுத்தம் செய்து, மாடுகளை தொட்டுத் தடவி வந்தால் ஆபத்தான புற்றுநோயே பஞ்சாய் பறந்துவிடும் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் கங்வார்.. அமைச்சரவையில் கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை ஆலைகள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் சஞ்சய் சிங் கங்வார்... இவர், நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை நேற்று திறந்து வைத்தார்.

uttar pradesh bjp cancer blood pressure

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய சஞ்சய் சிங், "மாட்டு தொழுவத்தில் படுத்து தூங்கி அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்... பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்.. ரத்த அழுத்த நோயாளி ஒருவர், நாள் ஒன்றுக்கு 2 முறை பசுவின் முதுகில் தடவினால், அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்..

ரத்த அழுத்தம்: இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால், இந்த பசுக்களிடம் வரலாம்.. ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளானவர், தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக்கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும்... மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்..

தாய்க்கு சேவை செய்யவில்லையானால், அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக சொல்கிறார்கள்.. மாடுகளுக்கு உரிய மரியாதையை யாரும் தருவதில்லை.. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினையே உருவாகிறது. ஈத் பண்டிகை தினத்தன்று முஸ்லிம்கள், மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும்... ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

uttar pradesh bjp cancer blood pressure

சலசலப்பு பேச்சு: அமைச்சரின் இந்த பேச்சுதான் சலசலப்பையும், சர்ச்சையையும் கூட்டி வருகிறது. மத்திய பாஜக ஆட்சியில் பல எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பசுக்களை வைத்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பேசிவருவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பல முறை அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்துவதாக, எதிர்க்கட்சிகளும் பதிலடிகளை தந்து வருகிறார்கள். சமீபத்தில்கூட, அசாம் மாநில சில்சார் தொகுதி பாஜக எம்எல்ஏ திலீப் குமார்பால், சில்சாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்புரையாற்றினார்.

பசுக்கள்: அப்போது அவர், "பகவான் கிருஷ்ணர் இசைக்கும் தனித்துவமான புல்லாங்குழல் இசையைப்போல இசைத்தால், அதை காதால் கேட்கும் பசுக்கள் வழக்கத்தைவிட கூடுதலாகப் பால் கறக்கும். அந்த இசையில் அவ்வளவு சிறப்புகள் உள்ளன.. இதையெல்லாம் நானாக சொல்லவில்லை, நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.. பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசையென்பது வெறும் பொழுதுபோக்குக்காக கிடையாது" என்று கூறியிருந்தார்.

uttar pradesh bjp cancer blood pressure

இந்த பேச்சும் அப்போது சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், இப்போது மீண்டும் பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் மற்றொரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்..

விவாதம்: ரத்த அழுத்த நோயாளிகள், தினமும் காலை மாலை மாடுகளை தடவிக்கொடுத்து அதற்கு உணவிட்டு வந்தால் 10 நாட்களில் அவர்களின் 20 எம்.ஜி அளவு மாத்திரைகள், 10 எம்.ஜி என குறைந்துவிடும் என்றும், மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும், பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றெல்லாம் கூறியிருப்பது மிகப்பெரிய விவாதத்தை மீண்டும் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+