வாடகை வீட்டில் கேமராவை வைத்த ஹவுஸ் ஓனர்.. குளியலறை, பெட்ரூமில் "சுழண்ட கண்கள்".. குழம்பி பார்த்த பெண்
லக்னோ: வாடகை வீட்டில் குடியிருந்த மாணவிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி காத்திருந்தது.. இதுகுறித்து போலீசில் புகார் செய்திருந்த நிலையில், காவல்துறையும் தன்னுடைய கடமையை உடனடியாக செய்து முடித்துள்ளது. எனினம் இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷகர்பூரை சேர்ந்தவர் அந்த மாணவி.. இவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்.. எந்தவித தொந்தரவும் இல்லாமல் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்..

பாத்ரூம்: இந்த வீட்டில்தான், தேர்வுகளுக்கு படித்து தயாராகி வருகிறார்.. ஆனால், அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் கரண், மாணவி தங்கியிருந்த வீட்டின் பாத்ரூமிலும், பெட்ரூமிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி வைத்துள்ளார்.. இதனால், மாணவியின் அன்றாட நிகழ்வுகள் அந்த வீடியோவில் பதிவாகி வந்த நிலையில், அனைத்தையும் அந்த இளைஞர் சேமித்து வந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லும்போதெல்லாம், தன்னுடைய வீட்டு சாவியை ஹவுஸ் ஓனரான கரணிடம் ஒப்படைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்..
அப்படித்தான், இந்த வீட்டுக்கு வந்த புதிதில், தன்னுடைய சொந்த ஊருக்கு மாணவி கிளம்பிச்சென்றிருக்கிறார்.. வழக்கம்போல சாவியை ஹவுஸ் ஓனரிடம் தந்துவிட்டு போனபோது, அந்த நேரத்தில், மாணவியின் வீட்டின் படுக்கையறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமிராவை நிறுவியுள்ளார் கரண்.
லேப்டாப்கள்: கேமிராக்களில் பொருத்தப்பட்டிருந்த சிப்பில், வீடியோ காட்சிகள் பதிவான நிலையில், ரகசிய கேமிராக்கள் செல்போனிலும், லேப்-டாப்பிலும் இணைக்கப்படாமல் இருந்திருக்கிறது.. அதாவது, பதிவாகிற வீடியோ காட்சிகள் சிப்பிலேயே ஸ்டோர் ஆவதைப்போல செட் பண்ணியிருந்தார்.. இந்த சிப்பை எப்படியாவது வெளியே எடுத்துவிட வேண்டும் என்று கரண் காத்து கொண்டேயிருந்தார். ஆனால், மாணவி அவ்வளவு சீக்கிரம் சொந்த ஊருக்கு கிளம்பவில்லை.
இதனால், மாணவியிடமே வந்து, ஊருக்கு போகவில்லையா? என்று அடிக்கடி கரண் கேட்டுக் கொண்டேயிருந்தார்.. மாணவியின் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்பதிலேயே கரணின் பேச்சு இருந்தது..
அதுமட்டுமல்ல, உங்கள் வீட்டிற்குள் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.. பாத்ரூம், பெட்ரூமில் ஒயரிங் வேலை செய்ய வேண்டும், நான் எப்போது வருவது? என்று மாணவியை கேட்டு துளைத்தெடுத்து வந்துள்ளார் கரண். இதெல்லாம் மாணவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதனால், சந்தேகத்துடன் பாத்ரூமில் நுழைந்து ஆய்வு செய்துள்ளார்.. அப்போதுதான், பல்ப் ஹோல்டரில் கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக போலீசுக்கு ஓடிய மாணவி, இதுகுறித்து புகார் தந்தார்..
இத்தனை கேமரா: போலீசாரும் மாணவியின் வீட்டுக்கு விரைந்து வந்து சோதனை செய்தபோதுதான், பெட்ரூமிலும் பல்ப் ஹோல்டரில் இன்னொரு கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 3 கேமிராக்கள் மாணவியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்தன.. இதற்கு பிறகே போலீசார் விசாரணையை துவங்கி, ஹவுஸ் ஓனர் கரணை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அபூர்வ குப்தா சொல்லும்போது, "3 மாதங்களுக்கு முன்பு, மாணவி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது, வீட்டு சாவியை கரணிடம் கொடுத்துள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கரண் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் 3 ஸ்பை கேமராக்களை வாங்கி, ஒன்றை படுக்கையறையிலும், ஒன்றை குளியலறையிலும் பொருத்தினார்.
அதிரடி கைது: ஆனால், இந்த கேமராக்களை ஆன்லைனில் இயக்க முடியாது. அதனால் அதன் வீடியோக்கள் அத்தனையும் மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும்.. இதனை எடுப்பதற்காக, வீட்டிற்குள் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக பலமுறை சொல்லி, மாணவியிடம் சாவியை கேட்டு வீட்டிற்குள் நுழைந்து, பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தன்னுடைய லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.. இப்போது, கரணை கைது செய்து விசாரித்து வருகிறோம்.. அவரது ஸ்பை கேமரா, 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
லேப்டாப்: அதுமட்டுமல்லாமல், தன்னுடைய வாட்ஸாப் கணக்கு வேறு ஒரு லேப்டாப் வழியாக கண்காணிக்கப்படுவதை மாணவி கண்காணித்துள்ளார்.. எனவே, தன்னுடைய லேப்டாப் இணைப்பை துண்டித்துவிட்டார்..
கைது செய்யப்பட்டுள்ள கரணுக்கு 30 வயதாகிறது.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.. ஆனால் நன்கு படித்த பட்டதாரியும்கூட.. கடந்த 7 வருடங்களாகவே அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி வருகிறாராம் கரண்.. என்ன படித்து என்ன? புத்தி சரியில்லையே...!!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications