பேச்சுரிமை என்பது பிரதமர் மோடியை இழிவாக விமர்சிப்பதற்கு அல்ல.. அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபர கருத்து
லக்னோ: பேச்சுரிமை என்பது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பிறரை இழிவுப்படுத்தும் வகையில் விமர்சிப்பது அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் மும்தாஜ் மன்சூரி. இவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தி வருகிறார். மேலும் குறிப்பிட்ட விஷயங்களில் தனது கருத்துகளை பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த 2020ல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்தார். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு
மேலும் மும்தாஜ் மன்சூரிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீர்காஞ்ச் போலீசார் இந்திய தண்டனைசட்டம் 504 (வேண்டுமமென்றே ஒருவரை அவமதிப்பு செய்து அமைதியை சீர்குலைத்தல்) மற்றும் ஐடி சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மும்தாஜ் மன்சூரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதிகள் அஸ்வினி குமார், ராஜேந்திர குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

பேச்சுரிமை அல்ல
மேலும் இந்த விசாரணையின்போது நீதிபதிகள் மும்தாஜ் மன்சூரியின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது‛‛இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் பேச்சுரிமை வழங்குகிறது. இதன்மூலம் பிறரை இழிவாகவும், வசைபாடுவது என்பது ஏற்புடையது அல்ல. எந்த காரணத்தை கொண்டும் இதனை ஏற்க முடியாது. பிரதமர், அமைச்சர்களை திட்டி பேசுவது என்பது பேச்சுரிமையின் கீழ் வராது.

சட்ட நடவடிக்கையை தொடர..
எனவே எப்ஐஆரின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் சட்ட நடவடிக்கையை தொடர போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இந்த வழக்கை போலீசார் விரைந்து முடிக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications