பின்லேடன் தான் எனது குரு! உபி அலுவலகத்தில் போட்டோ மாட்டிய அரசு அதிகாரி! அதிரடியாக சஸ்பெண்ட்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகத்தில் அல்குவைதா பயங்கரவாத அமைப்பை நிறுவிய ஒசாமா பின்லேடன் படத்தை மாட்டி ‛உலகின் சிறந்த இன்ஜினீயர்' என புகழாரம் சூட்டிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேர மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பாருக்காபாத் மாவட்டம் உள்ளது.
இந்த மாவட்டத்தில் நவாப்கஞ்ச் டவுன் உள்ளது. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் சப் டிவிஷனல் அதிகாரியாக ரவீந்திர பிரகாஷ் கவுதம் பணியாற்றி வருகிறார்.

பின்லேடன் போட்டோ
இவர் தனது அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் அறையில் அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் போட்டோவை சுவற்றில் மாட்டி வைத்தார். அந்த போட்டோவின் அடியில், ‛உலகில் மிகச்சிறந்த இன்ஜினீயர்' என எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர் அதிகாரிகள் அவரது அலுவலகம் சென்றனர்.

எனது குரு பின்லேடன்
அப்போது சுவற்றில் பின்லேடன் போட்டோ மாட்டப்பட்டு இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது ‛பின்லேடன் எனக்கு குரு' என தெரிவித்தார். இதனை கேட்டு அதிகாரிகள் இன்னும் அதிர்ச்சியாகினர். இதையடுத்து அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாரிக்கும் கமிட்டி
இதற்கிடையே வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்த கொண்டவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இதுபற்றி உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛அலுவலகத்தில் இருந்த ஒசாமா பின்லேடன் படம் அகற்றப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி விசாரிணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விசாரணை அறிக்கை அளித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மாறாத அதிகாரி
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை கமிட்டி விசாரிக்க துவங்கி உள்ளது. இதற்கிடையேவும் ரவீந்திர பிரகாஷ் கவுதம் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. எனக்கு ஒசாமா பின்லேடன் பிடிக்கும். என்னை கவர்ந்த நபர்களில் அவர் ஒருவர். இதனால் என்னிடம் நிறைய போட்டோக்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications