பட்டப்பகலில் செக்ஸ் டார்ச்சர்.. உபியில் ஹிஜாப் அணிந்த பெண் மீது கொடூர தாக்குதல் - ஆட்டோவில் கடத்தல்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணை ஆண் ஒருவர் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தற்போது வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சிகள். ரேபரேலியில் சாலையோரம் நடந்து செல்லும் ஹிஜாப் அணிந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர், அவரை கொடூரமாக தாக்கும் காட்சிதான் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

தாக்கப்பட்ட பெண்ணுக்கு பின்னால் நடந்து சென்ற ஆண் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு அருகே சென்று அவரது தோள் மீது கைபோட்டு தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச்செல்ல முயல்கிறார். உடனே பெண்ணின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அந்த ஆண் இழுத்தார்.
கையை உதறிவிட்டு பெண் செல்ல முயன்றபோது, ஆத்திரமடைந்த ஆண் அவரை ஓங்கி அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அதன் பிறகு அந்த பெண் உடன்பட மறுத்த நிலையில் சாலை ஓரத்திலேயே தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகிறார் அந்த நபர். சில வினாடிகள் கழித்து அந்த பெண்ணை அருகே உள்ள கடைக்குள் தள்ளுகிறார்.

தொடர்ந்து அவரது இணங்க மறுத்த பெண்ணை மீண்டும் தாக்குவதுபோல் கை ஓங்கி மிரட்டுகிறார். அதன் பின் தன்னுடைய செல்போனை எடுத்து யாரிடமோ அவர் பேசுகிறார். உடனே அங்கு ஒரு ஆட்டோ வந்து அவர் அருகிலேயே நிற்கிறது. அதற்குல் பெண்ணை இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றார் அந்த நபர்.
அங்கிருந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 20 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அந்த சிசிடிவி காட்சியில் காட்டுகிறது. லக்னோ - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

ஆட்டோவில் கடந்தி செல்லப்பட்ட பெண்ணை ஒரு அறைக்கு அந்த நபர் அழைத்து சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரேபரேலி போலீஸ் அளித்து உள்ள விளக்கத்தில் ஹர்சந்த்பூர் போலீஸ் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் அப்பாவி பெண்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அண்மை காலங்களில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த வாரம் ஹர்சந்த்பூரை அடுத்த திதோலி கிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் 3 பெண்கள், 2 ஆண்கள் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications