Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரிக்கார்டு".. உபியில் 25-ந் தேதி யோகி பதவியேற்பு விழா.. "அவங்களும்" வர்றாங்களாமே, செம எதிர்பார்ப்பு

உபியில் யோகி முதல்வராக 25-ம்தேதி பதவியேற்கிறார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச முதல்வராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார்... பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலங்காலமாகவே, வடமாநிலங்களில் சாதீய அழுக்கு நிறையவே படிந்துள்ளன.. குறிப்பாக, பீகார், உபியில் இது சற்று அதிகமாகவே நிறைந்துள்ளது.. இதற்கு காரணம், போதுமான மற்றும் பரவலான கல்வியறிவு அம்மாநில கிடைக்காததுதான்.

சாதி ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, சாதிய வன்முறைகள், இப்படி பல பெயர்களை வைத்துதான் அங்கு காலம் காலமாக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.. போதாக்குறைக்கு மதவாத அரசியலும் இணைந்து கொண்டதால், இதற்கான விளைவுகளை சிறுபான்மையினர் அனுபவிக்கும் நிலைமையும் அங்கு ஏற்பட்டு வருகிறது.

 சாதி - மதம்

சாதி - மதம்

எனினும், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மையாகும்... இந்த முறையும் சாதி, மத அரசியலை முன்னிறுத்தியே தேர்தலை கட்சிகள் முன்னெடுத்தன.. யோகி ஆட்சியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை அக்கட்சியின் மூத்த தலைவர்களே பகிரங்கமாக அறிவித்து, கட்சியை விட்டு வெளியேறியும்கூட, பாஜக இந்த முறை ஆட்சியை மீண்டும் அங்கு தக்க வைத்துள்ளது.

 உபி முதல்வர்

உபி முதல்வர்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், உபி மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன.. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பிறகு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது... இது இதற்கு முன்பு நடக்காத உபி வரலாறு ஆகும்.. உபி முதல்வராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடை பெறுகிறது.

 ஜேபி நட்டா

ஜேபி நட்டா

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.. அதேபோல, சோனியா காந்தி, முலாயம்சிங், மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.. உத்தரபிரதேச அமைச்சர்கள் பட்டியலும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.. புதிய அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 தலைமை

தலைமை

வெற்றி பெற்ற மாநிலங்களில் மற்ற முதல்வர்கள் பதவியேற்று கொண்ட நிலையில், உபியில் மட்டும் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.. இதற்கு காரணம், அமைச்சர்கள் லிஸ்ட் தயாராவதில் சற்று தாமதமாகி உள்ளதாக தெரிகிறது.. பொதுவாக, வெற்றிபெறும் தேசிய கட்சிகள் மாநில அமைச்சர்களை தேர்வு செய்யும் பொறுப்பை மாநில தலைமையிடமே ஒப்படைக்கும்.. தலைமையும் அதை பரிசீலித்து ஒரு சில பரிந்துரைகள் செய்து, அனுமதி வழங்கும்.. அப்படித்தான் இந்த முறையும் 4 மாநிலங்களில் வென்ற பாஜக எம்எல்ஏக்களின் லிஸ்ட்டை தலைமையிடம் அனுப்பி வைத்திருந்தனர்.

 4 மாநில அமைச்சரவை

4 மாநில அமைச்சரவை


அதில், வயது குறைவான எம்எல்ஏக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை எம்எல்ஏக்களுக்கு 4 மாநில அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மேலிடம் பிளான் செய்வதாகவும், அதற்கு பிறகு, அந்த லிஸ்ட்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறப்பட்டது.. அதன்படியே, அனைத்து மாநில லிஸ்ட்டுகளும் தற்போது தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.- அதன்படி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் பொறுப்பு என்பதை, மேலிடம் லிஸ்ட்டில் பார்த்து பார்த்து டிக் அடித்துள்ளது..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

வரப்போகும் எம்பி தேர்தலை கணக்கில் வைத்தே இந்த அமைச்சரவை லிஸ்ட் தயாராகி உள்ளதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, அதிகம் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.. அதேபோல பாஜகவின் சீனியர்களுக்கு இந்த முறை பதவி வழங்கப்படாது என்றும் சொல்கிறார்கள்.. அதனால் அமைச்சரவை எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்து வருகிறது.. எப்படி பார்த்தாலும், யோகி தலைமையில் ஆட்சி அமைய உ.பி. மாநிலம் ஜரூராக தயாராகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+