டாக்டரிடம் ஐபோன் திருடிய நபர்.. அடுத்த ஒரு மணிநேரத்தில் ட்விஸ்ட்.. சிக்கியது எப்படி? சுவாரசிய தகவல்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நோயாளி போல் நடித்து டாக்டரிடம் இருந்து ஐபோனை திருடிய நபரை போலீசார் அடுத்த ஒரு மணிநேரத்தில் அதிரடியாக கைது செய்தனர். இந்த திருடன் எப்படி சிக்கினான்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நபர் வந்தார். சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவர் தனது காலில் அடிபட்டுள்ளதாக கூறினார். நொண்டிநொண்டி நடந்து சென்றார்.

அந்த நபரால் சரியாக நடக்க முடியவில்லை. இடது கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருந்தார். மருத்துவரின் மருந்து சீட்டுடன் நடந்து சென் று கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்களிடம் உதவி கோரினார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இந்த வேளையில் மருத்துவமனையில் ஜூனியராக பணியாற்றும் டாக்டர் அணிந்திருந்த கோட்டில் இருந்து அந்த நபர் ஐபோனை திருடிவிட்டு சென்றார். அதனை டாக்டர் உணரவில்லை. அந்த நபர் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற சமயத்தில் தான் டாக்டர் தனது ஐபோன் திருடப்பட்டு இருப்பதை உணர்ந்தார். உடனடியாக அவர் தனது எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். அது ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் நோயாளியாக இருந்த நபர் திருடி இருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது உதவி செய்தபோது அந்த நபர் நைசாக கோட்டில் இருந்த ஐபோனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர் போலீசில் புகார் தெரிவித்தார். அடுத்த 60 நிமிடத்தில் அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் இருந்த ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் முகமது ஃபைஸ் என்பதும், நோயாளி போல் நடித்து டாக்டரிடம் ஐபோன் திருடியதும் தெரியவந்தது. மேலும் பல இடங்களில் அவர் மக்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன் உள்பட பலவற்றை திருடியது தெரியவந்தது.
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ஷ்ரவன் குமார் கூறுகையில், ‛‛ஐபோன் திருடியவரை போலீசார் விரைவாக கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த போலீஸ் டீமை நான் பாராட்டுகிறேன் இந்த கைது நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தான் காரணம். சிசிடிவியால் தான் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications