Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''உ.பி.யில் தோற்றால்.. நாடு முழுக்க பாஜக வீழ்ச்சியடையும், காணாமல் போகும்'' மம்தா பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக நீக்கப்பட்டால், இந்தியாவில் பாஜக என்ற கட்சியே இருக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள‌ 403 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டார். உத்தரப்பிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியை ஆதிரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரசாரம் செய்து வருகிறார்.

 சமாஜ்வாதி

சமாஜ்வாதி

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றார். அகிலேஷ் யாதவ் அழைப்பின் பேரில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய லக்னோவிற்கு செல்வதாக மம்தா குறிப்பிட்டார்.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அடுத்த நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தேசிய தலைவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மம்தா செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த‌ மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடும் போட்டிக்கு நடுவே மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதை தேசிய அளவில் கொண்டு செல்ல மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம், 403 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இங்கு வெற்றி பெறும் கட்சி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இங்கு வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மோதிக்கொள்ளும். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பின்பேரில் உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொண்டார் மம்தா பானர்ஜி.

பிரசாரம்

பிரசாரம்

இன்று நடந்த பிரசாரத்தில் மம்தா பேசும்போது, ''பாஜகவை தோ்தலில் தோற்கடிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் வெல்ல வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் விரும்புகிறது. பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் வெல்ல அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் தேவை. பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உத்தர பிரதேசத்தில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. நான் வாராணசிக்கும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

பாஜக‌

பாஜக‌


பாஜகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி விடாதீர்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக நீக்கப்பட்டால், இந்தியாவில் பாஜக என்ற கட்சியே இருக்காது'' என்று அனல் பறக்க சமாஜ்வாதிக்காக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார் மம்தா. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக எல்லா இடங்களிலும் பேசி வரும் மம்தா, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பயிற்சிக்களமாக உத்தரப்பிரதேச தேர்தலை உற்றுநோக்கி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+