4 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் பாஜக..உ.பி.யில் 50 இடங்களை இழந்தது.. மீண்டெழுந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்
லக்னோ : உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை விட பல தொகுதிகளை இழந்துள்ளது. அதே நேரம் சமாஜ்வாதி கட்சி பல இடங்களை கூடுதலாக வென்றுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன
காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இதேபோல் பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக வெற்றி
தற்போதை வெளியாகியுள்ள தகவல்களின் படி உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது வரை 208 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதோடு, 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

2017 தேர்தல்
தேசிய அரசியலை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேசம் ஒரு முக்கியமான மாநிலம் ஆகும். உ.பி.யில் வெற்றி பெற்றவர் இந்தியாவை வெல்வார் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை உத்திர பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாஜக, தொடர்ந்து பிஜேபி 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 312 இடங்களை வென்றது. இரண்டாவதாக வந்த கட்சி சமாஜ்வாதி கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

50 இடங்கள் குறைவு
தற்போதைய நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 273 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இது கடந்த தேர்தலைவிட நாற்பத்தி ஒன்பது தொகுதிகள் குறைவாக உள்ளது. கடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 322 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது கடந்த தேர்தலை விட சுமார் 50 தொகுதிகள் குறைவாகும்.

மீண்ட சமாஜ்வாதி கட்சி
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் அக்கட்சியை பொருத்தவரை பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது என்றே கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தற்போது 125 இடங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையான கடந்த தேர்தலில் கிடைத்த எண்ணிக்கையை விட சுமார் 70 தொகுதிகள் அதிகமாகும். ஒரு புறம் தோற்றாலும் கடந்த தேர்தலில் கிடைத்த தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகவே சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications