‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜெய்ஸ்ரீராம், விராட் கோலி என எழுதிய மாணவர்களை ஆசிரியர் பாஸ் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில், வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பி பார்மா துறையில் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தகுதியில்லாத மாணவர்கள் தேர்ச்சி பெற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விவகாரம் குறித்து துணைவேந்தரிடம் புகார் மனுவை கொடுத்திருக்கிறார். ஆனால், புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விசாரணை நடத்துவதாகவும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் துணைவேந்தர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி பார்மா துறையில் முதலாமாண்டில் தேர்வான சில மாணவர்களின் வினாத்தாளின் நகலை திவ்யான்ஷு சிங் கேட்டிருந்தார். இந்த நகல்கள் இன்று கிடைக்க பெற்றிருக்கின்றன. இதில் பல தேர்தவான பல மாணவர்கள் சரியான விடையை எழுதாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது ஜெய்ஸ்ரீராம் என்றும், விராட் கோலி, ரோஹித் எனவும் அந்த மாணவர்கள் விடைகளை எழுதியுள்ளனர். சரியாக சொல்வதெனில் ஜெய்ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், விராட் கோலி, ரோஹித் வார்த்தைகளை மட்டும் வைத்தே மாணவர்கள் விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். இந்த விடைத்தாள் நகல்களை வேறு பேராசிரியர்களிடம் கொடுத்து திருத்தச் சொன்னபோது அவர்கள், அனைத்து விடைத்தாள்களுக்கும் '0' மதிப்பெண்ணை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வந்தனா கூறியுள்ளார். பின்னர் தேர்வு குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில், டாக்டர் வினய் வர்மா மற்றும் டாக்டர் ஆஷிஷ் குப்தா என இரண்டு ஒப்பந்த ஆசிரியர்கள் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை பாஸ் செய்ய வைத்திருக்கிறார்கள் என தெரிய வந்திருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை வேந்தர் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தொடர்பு இருக்கிறது, எனவே அவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமான் என எழுதியதால் பல்கலைக்கழக மாணவர்கள் பாஸ் செய்யப்பட வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications