சனாதன தர்ம கொள்கையை மீட்டெடுக்கணும்! கேரள கவர்னர் ஆரீப் கான் வலியுறுத்தல்
லக்னோ: ‛‛இந்தியாவில் ‛சனாதான தர்ம கொள்கையை' மீட்டெடுக்க வேண்டும்'' என கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் கூறினார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கேரள மாநில ஆளுநராக ஆரீப் முகமது கான் செயல்பட்டு வருகிறார்.

இவர் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் கலான் நகரில் தனியார் பள்ளி ஒன்றை ஆரீப் முகமது கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது, இந்தியாவில் முறையான கல்வியை பரப்பி பழைய கலாச்சாரம் மற்றும் 'சனாதன தர்ம' கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என கூறினார். இதுபற்றி ஆரீப் முகமது கான் பேசியதாவது:
"நாட்டில் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் அங்கு திரும்பி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தியாவில் 'சனாதன' கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். இதை செய்வது என்பது கல்வி இல்லாமல் சாத்தியமில்லை. இதனால் முறையான கல்வியை வழங்க வேண்டும்.
மேலும், மனித வாழ்வின் நோக்கம் என்பது அறிவை தேடுவது தான் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இதனால் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் பணிவு என்பது அறிவை பொறுத்ததாகவே இருக்கும். இதனால் பணிவு குணம் கொண்டவர்களை இழிவாக பார்க்க முடியாது'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications