உபியில் கார் ஏற்றி விவசாயிகள் கொலை: ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை.. ராகேஷ் திகாய்த் வேதனை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிபூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டுகள் நிறைவடைந்தும் இன்னும் இதில் நீதி கிடைக்கவில்லை என்று விவசய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பின்னால் வேகமாக வரும் வாகனம் ஒன்று மோதி தூக்கி வீசி விட்டு நிற்காமல் செல்கிறது. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓராண்டு ஆகிறது

ஓராண்டு ஆகிறது

இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. எஸ்யூவி காரை ஏற்றி கொல்லப்பட்டதில் 4 விவசாயிகள் கொலை செய்யப்பட்டனர். அதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் என மேலும் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பம் நடைபெற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

தேசம் ஒருநாளும் மறக்காது

தேசம் ஒருநாளும் மறக்காது

ஆனாலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள விவசாய சங்க தலைவர் ரகேஷ் திகாய்த், வரும் திங்கட்கிழமை ஒரு ஆண்டு ஆனதை அனுசரிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒன்று கூட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது:- கடந்த ஆண்டு இதே நாளில் திகுனியா கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை இந்த தேசம் ஒருநாளும் மறக்காது.

விவசாயிகள் திரள்வார்கள்

விவசாயிகள் திரள்வார்கள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அமைதியான அந்த வாரத்தில், வன்முறை வெடித்து 8 பேரின் உயிரை காவு வாங்கியது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நாட்டில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டார்கள். இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் விவசாயிகள் திரள்வார்கள்'' என்றார்.

 குரல் எழுப்ப மட்டுமே முடியும்

குரல் எழுப்ப மட்டுமே முடியும்

மேலும் உரிய நீதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மாநில அரசே காரணம் என்று ராகேஷ் திகாய்த் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ராகேஷ் திகாய்த் கூறியதாவது:- அரசியல் அமைப்பையோ சட்ட நடைமுறைகளையோ ஆளும் தரப்பு நம்புவதில்லை. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், உங்களின் (ராகேஷ் திகாய்த்) அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகேஷ் திகாய்த், ''மக்கள் கோரிக்கை வைத்து குரல் எழுப்ப மட்டுமே முடியும். மற்றவை அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+