‛வாஜ்பாயை பிரதமராக்கிய லக்னோ’.. ராஜ்நாத் சிங் தொகுதியின் ஹிஸ்டரி இதுதான்! 33 ஆண்டாய் மலரும் தாமரை
லக்னோ: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அந்த தொகுதிக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுக்கும் இடையேயான தொடர்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளுக்கு எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. மாறாக பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2019 ல் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் 2 லட்சத்து 71 ஆயிரத்த 749 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு கடந்த 2019 தேர்தலின்போது 3 லட்சத்து 47 ஆயிரத்து 302 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியிருந்தார். இந்நிலையில் தான் 3வது முறையாக அவர் அந்த தொகுதியில் களமிறங்க உள்ளார். இத்தகைய சூழலில் தான் இந்த தொகுதிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கும் இடையேயான பந்தம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொகுதி என்பது வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். இன்னும் சொல்ல வேண்டுமானால் லக்னோ வாஜ்பாயின் கோட்டையாகும். அதாவது வாஜ்பாய் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோது பால்ராம்பூர், குவாலியர், டெல்லி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்து இருந்தார். அதன்பிறகு கடந்த 1991ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தொகுதி மாறி போட்டியிட்டார். முதல் முறையாக லக்னோ தொகுதியில் அவர் களமிறங்கி வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2வது முறையாக 1996ல் லக்னோ மற்றும் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் வாஜ்பாய் போட்டியிட்டார். 2 தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் காந்தி நகர் எம்பி பதவியை ராஜினாமா செய்து லக்னோ எம்பியாக தொடர்ந்தார். அதன்பிறகு 1998,1999, 2004 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களிலும் அவர் லக்னோ தொகுதியில் வென்று எம்பியாக இருந்தார். அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது லக்னோ தொகுதி எம்பியாக தான் இருந்தார்.
வாஜ்பாய் தனது அரசியல் வாழ்க்கையில் ராஜ்யசபா எம்பியாகவும், நாடாளுமன்ற லோக்சபா எம்பியாகவும் இருந்துள்ளார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் மூலம் 10 முறை எம்பியாக இருந்துள்ளார். இதில் 1991, 1996, 1998, 1999, 2004 என 5 முறை அவர் லக்னோ தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக ஜொலித்தார். இத்தகைய சூழலில் தான் ராஜ்நாத் சிங் 3வது முறையாக (இதற்கு முன்பு 2014, 2019 தேர்தலில் வெற்றி) போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications