உ.பி.யில் கை கொடுக்காத மெகா கூட்டணி.. அகிலேஷ்-மாயாவதிக்கு ‘ஷாக்’ தோல்வி
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியால் பாஜகவின் வெற்றியை தடுத்த நிறுத்த முடியவில்லை. நாடு முழுவதும் எதிர்பார்த்த மாயாவதி- அகிலேஷ் கூட்டணி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 தேர்தலில் பாஜக 72 இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. இத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் பரம எதிரிகளான மாயாவதி- அகிலேஷ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன.

அகிலேஷ்-மாயாவதி கணக்கு
இந்த கூட்டணியானது யாதவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் வாக்குகளை அப்படியே அள்ளிவிடும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. பாஜகவும் கூட இதனால் உயர்ஜாதியினர் வாக்குகளை மட்டும் குறிவைத்து வியூகம் வகுத்தது.

தீர்மானிக்கும் சக்தி
அதேநேரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு திரும்பியுள்ளது.

ரிசல்ட் முன்னேற்றம் இல்லை
மாயாவதி- அகிலேஷ் கூட்டணி எதிர்பார்த்த அளவு முன்னிலையில் இல்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் தங்களது சொந்த செல்வாக்கான தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கின்றன.

மாயாவதிக்கு பலத்த அடி
இந்த கூட்டணியால் பாஜகவின் செல்வாக்கை தடுக்க முடியவில்லை. உத்தப்பிரதேசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி பிரதமர் பதவி கனவில் மிதந்த மாயாவதிக்கு பலத்த அடி கொடுத்து வருகிறது தேர்தல் முடிவுகள்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications