மௌனி அமாவாசை.. கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலியாகியுள்ளனர். இன்று தை (மௌனி) அமாவாசை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்திருக்கின்றனர். இதுவே நெரிசலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பிரயாக்ராஜில் கடந்த ஜன.13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. சுமார் 46 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜன.13 தொடங்கி நேற்று வரை 16 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். குறிப்பாக இன்று மௌனி அமாவாசை என்பதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. இந்த 46 நாட்களில் குறிப்பிட்ட 6 நாட்களில் நீராடினால், அது சிறப்புமிக்கதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக,

ஜன. 13ம் தேதி பௌஷ பௌா்ணமி,
ஜன. 14ம் தேதி மகர சங்கராந்தி
ஜன. 29ம் தேதி (இன்று) மௌனி அமாவாசை
பிப். 9ம் தேதி வசந்த பஞ்சமி
பிப். 12ம் தேதி மாசி பௌா்ணமி
பிப். 26ம் தேதி மகா சிவராத்திரி
ஆகிய நாட்களில் நீராடினால் மிகவும் புனிதம் என்று கருதப்படுகிறது. எனவேதான் இன்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர். இந்த நெரிசலில் சிக்கி 15 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை உணர்ந்திருந்த உ.பி அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்ததாக கூறியுள்ளது. பக்தர்களுக்கு உதவ 1000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும், 300க்கும் அதிகமான டாக்டர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கோடி பக்தர்கள் நீராடும் இந்த பகுதியில் வெறும் 300 டாக்டர்கள் போதுமானதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications