மீண்டும்.. மீண்டுமா? எரிச்சலான மனைவி! அடம்பிடித்த அடாவடி கணவன்! கொலையில் முடிந்த 'காமம்'
லக்னோ: தனது மனைவி தன்னிடம் ஒரே இரவில் இரண்டுமுறை செக்ஸ் வைத்துக்கொள்ள மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்த கணவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்வர். இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது.
தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமாக பேக்கரி ஒன்றும் இருக்கிறது. வீட்டின் கீழ்த்தளத்தில் பேக்கரியும் மேல்தளத்தில் குடும்பமும் வசித்து வந்துள்ளது.

புகார்
இவ்வாறு இருக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென தனது மனைவியை காணவில்லை என்று தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரில், தனக்கும் தனது மனைவிக்கும் எந்த தகராறும் ஏற்படவில்லை என்றும், ஆனால் ஏன் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார் என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அன்வரின் மனைவியினுடைய புகைப்படத்தை சுற்றுவட்டார காவல் நிலையத்திற்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். அதேபோல அன்வரின் குடும்ப உறுப்பினர்களிடத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தடயம் அழிப்பு
இதனையடுத்து நேற்று அம்ரோஹாவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள தாகூர்த்வாரா மாவட்டத்தின் ரதுபுரா நகரில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டவாறு அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அம்ரோஹா காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படமும் அடையாளம் தெரியாத பெண் சடலமும் ஒரே மாதிரி இருக்கும் நிலையில் அடையாளம் காண அம்ரோஹர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அன்வரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அன்வர் கதறி அழுது ஏதேதோ புலம்பியுள்ளார். இதனையடுத்து அன்வரிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிவந்தன.

கொலை
அதாவது, அன்வருக்கு அவரது மனைவியின்மீது அதீத காதல் இருந்துள்ளது. சினிமாக்களில் வருவதைப் போல தனது மனைவியை இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் மனைவி கிராமத்து பெண் என்பதால் அதீத கூச்ச சுபாவத்தோடு இருந்திருக்கிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அனைவரும் தூங்கிய பின்னர் மனைவியை தனியாக அழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார். பின்னர் இருவரும் உறங்க சென்றுவிட்டனர். ஆனால் படுத்து 15 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் மனைவியை எழுப்பியுள்ளார். ஆனால் மனைவி அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் எழுப்பியுள்ளார். ஆனால் மனைவி எழவேயில்லை.

விசாரணை
இதனையடுத்து அடுத்த நாள் காலை யாரும் இல்லாத நேரமாக பார்த்து மனைவியை தனியாக அழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், இக்கொலையை மறைக்க மனைவியை பேக்கரியில் இருந்த பிளாஸ்டிக் கவரில் சுற்றி அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ரதுபுரா நகருக்கு கொண்டு சென்று போட்டுள்ளார். இதனை அனைவரும் மறந்துவிடுவார்கள் என்று நினைத்து இவ்வாறு செய்துள்ளார். மட்டுமல்லாது, தனது மனைவி வேறு யார் உடனோ ஓடி போய்விட்டாள் என்றும் எல்லோர் இடத்திலும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறை விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியில் வந்துள்ளது. ஒரே இரவில் இரண்டாவது முறை செக்ஸ் வைத்துக்கொள்ள மறுத்ததால் தனது மனைவியையே ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications