கணவருக்கு ஷாக் தந்த பெண்..தாடி ஷேவ் செய்ய மறுத்ததால் மைத்துனனை இழுத்து கொண்டு ஓட்டம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தாடியை ஷேவ் செய்ய மறுத்த இஸ்லாமிய மதகுருவை விட்டுவிட்டு அவரது தம்பியுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உஜ்வால் கார்டன் காலனி உள்ளது. இங்கு ஷாகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இஸ்லாமிய மதகுருவாக உள்ளார். இவருக்கும் அர்ஷி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

திருமணமான புதிதில் ஷாகீர் மற்றும் அர்ஷி ஆகியோர் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை தொடங்கினர். அதன்பிறகு தான் பிரச்சனை என்பது ஏற்பட தொடங்கியது. அதாவது ஷகீர் மதகுருவாக உள்ளார். இதனால் அவர் தனது முகத்தில் தாடி வளர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால் தனது கணவர் ஷாகீர் முகத்தில் தாடி வளர்ப்பது அர்ஷிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியை ஷேவ் செய்யும்படி அர்ஷி, தனது கணவரிடம் கூறியுள்ளார். அதனை ஷகீர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை என்பது ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த வேளையில் அர்ஷி, ‛‛நான் எனது குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் தான் திருமணம் செய்து கொண்டேன். தாடியை ஷேவ் செய்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன். இல்லாவிட்டால் பிரிந்து செல்வேன்'' என்றும் கூறினார். இதுபற்றி ஷாகீர் தனது குடும்பத்தினரிடம் கூறினார். குடும்பத்தினர் அர்ஷியை சமாதானம் செய்தனர்.
இதனால் அரைகுறை மனதுடன் அர்ஷி தனது கணவர் ஷாகீர் உடன் வசித்து வந்தார். இதற்கிடையே தான் அர்ஷிக்கும், ஷாகீரின் தம்பிக்கும் இடையே பழக்கம் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறி உள்ளது. இதனால் அர்ஷி, ஷாகீரை கைவிட்டு அவரது தம்பியுடன் வாழ நினைத்தார்.
இதுபற்றி ஷாகீரின் தம்பியிடம் அர்ஷி கூறியுள்ளார். முதலில் தயங்கிய அவர் அதன்பிறகு ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி அறிந்த ஷாகீர் அதிர்ச்சியடைந்தார். தனது மனைவி, தம்பி ஆகியோர் மாயமாகி உள்ளதாக போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் இருவரும் காதலித்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இந்த பிரச்சனையில் அர்ஷியின் குடும்பத்தினர் தலையிட மறுத்துவிட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications