லவ் மோகம்.. குடும்பத்தினர் மொத்த பேருக்கும் சாப்பாட்டில் விஷம்.. தப்பி ஓடிய சிறுமி!
குடும்ப உறுப்பினர்களை விஷம் வைத்து கொல்ல முயன்று இருக்கிறாள் சிறுமி ஒருத்தி
லக்னோ: 18 வயசு கூட ஆகலை.. வீட்டில் யாருமே தன் காதலை ஏற்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த பேருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டாள் அந்த சிறுமி!
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. 18 வயசு முழுமையாக பூர்த்தியடையாத சிறுமிக்கு, அரவிந்த் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது. வீட்டில் விஷயம் தெரிந்து சிறுமியை கண்டித்து இருக்கிறார்கள்.

ஆனால் சிறுமியும், அரவிந்த்குமாரும் கேட்கவில்லை. அதனால் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் பெற்றோர் இளைஞர் மீது போலீசில் புகார் தந்தனர். அதன்படி போலீசும் இளைஞனை கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றது. இப்போது இளைஞன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
நேராக சிறுமி வீட்டுக்கு போய், "யாராவது எங்க காதலுக்கு குறுக்கே நின்னா, நடக்கறதே வேற?" என்று மிரட்டி விட்டு வந்தார். எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதலும் தொடர்ந்து. ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் தொல்லை தாங்காமல் சிறுமி, அவர்களை கொலை செய்யவே முடிவு செய்துவிட்டார். இதுக்காகவே விஷத்தை யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்தாள். சிறுமியே அன்னைக்கு எல்லாருக்கும் சமைத்தாள். அதை சாப்பாட்டிலும் ஊற்றி கலக்கிவிட்டாள். இந்த சாப்பாட்டை சாப்பிட்டவுடன் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.
சிறுமியின் தாய், 2 சகோதரிகள், 2 சகோதரர்கள், அண்ணி, அண்ணன் மகன் என 7 பேரும் உயிருக்கு போராடி கிடந்தனர். அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யதேச்சையாக உள்ளே வந்தால், எல்லாரும் கீழே விழுந்து கிடக்கிறார்கள். இதை பார்த்து அலறிய அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்.
அப்போதுதான், குடும்ப உறுப்பினர்களில் சிறுமி மட்டும் மிஸ்ஸிங் என்று தெரியவந்தது. காதலனும் மாயமாகி உள்ளார். மொத்த குடும்பத்தையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்லும் அளவுக்கு துணிந்த சிறுமி மற்றும் காதலனை போலீசார் தேடி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்த 7 பேரில் 2 பேருக்கு உடல்நிலை சுமாராக உள்ளது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications