இதெப்படி இருக்கு.. கனவு கன்னியாக மாறிய மனைவி.. டெய்லி லேட்டாக வேலைக்கு போன போலீஸ்காரர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பணிக்கு தாமதமாக சென்ற ஆயுதப்படை காவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அந்த காவலர் அளித்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர்.
தமிழகத்தில் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து ஆயுதப்படை உள்பட வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் பிஏசி என்ற பிரதேஷிக் ஆயுதப்படை (PAC அல்லது Pradeshik Armed Constabulary) உள்ளது.

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை இந்த பிரிவு என்பது அந்த மாநிலத்தில் ‛பாரா மிலிட்டரி ஃபோர்ஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. வன்முறை, இருதரப்பு இடையேயான மோதல் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இந்த படைப்பிரிவை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த படைப்பிரிவில் காவலராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த மாதம் 16ம் தேதி பணிக்கு தாமதமாக சென்றார். காலை 9 மணிக்கு அவர் பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் தாமதமாக பணிக்கு சென்றார். இதனால் பணி விளக்க கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர் தனது சீருடையை சரியாக அணியவில்லை. இவர் பணிக்கு அடிக்கடி தாமதமாக வருகிறார் என்ற புகார் ஏற்கனவே இருந்தது.
'ஈரோடு போலீஸ் ஏட்டு நவீன்குமார் வீட்டில்'.. ஜன்னலில் எட்டிப் பார்த்து.. அதிர்ந்து போன காவலர்
இதனால் 44வது பட்டாலியனின் ஜி ஸ்குவாட்டில் கமாண்டராக பணியாற்றி வரும் மது சூதன் சர்மா அந்த காவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பணிக்கு தாமதமாக வந்ததற்கான காரணம் பற்றி ஒருநாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ்க்கு காவலர் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.
இதுதொடர்பாக அந்த காவலர் கொடுத்த விளக்கத்தில், ‛‛பிப்ரவரி 16ம் தேதி பணிக்கு நான் தாமதமாக வந்தேன். இதற்கு முக்கிய காரணம் என் மனைவி தான். எனக்கும், எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இருப்பினும் இரவில் நான் தூங்கும்போது மனைவி எனது கனவில் வருகிறார். அவள் என் மார்பில் அமர்ந்து என் ரத்தத்தை குடிக்க முயன்று கொல்ல பார்க்கிறாள். இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மனஉளைச்சலை தருகிறது.
அதேபோல் எனது தாயும் நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியில்லை. மேலும் என்னிடம் நம்பிக்கை என்பது இல்லாத நிலை உள்ளது. வாழ்வதற்கான விருப்பம் என்பது என்னிடம் இல்லை. கடவுளிடம் சரணடைய நான் விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை கூறுங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.
இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அவருக்கு உண்மையாகவே அந்த பிரச்சனை இருந்தால் மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதேவேளையில் மற்றொரு தரப்பினரோ வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications