லுலு மாலில் தொழுகை.. பொருள் வாங்காமல் புறக்கணிக்க பிரசாரம் செய்யும் இந்து அமைப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதற்கு இந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மாலுக்கு பொருட்கள் வாங்க செல்லாமல் இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு லுலு குழுமம் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக யூசுப் அலி உள்ளார். இந்த குழுமம் சார்பில் மத்திய கிழக்குநாடுகள், ஆசியா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் மால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்து வருகிறது. இதனால் லுலு குழுமம் சார்பில் இந்தியாவிலும் லுலு மால்கள் உள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு மாலை ஜூலை 10ல் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

மாலில் தொழுகை

மாலில் தொழுகை

இந்த மாலில் 2.2 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ள இந்த மாலில் மொத்தம் 300 சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. வாகன நிறுத்தத்துக்காக மொத்தம் 11 அடுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலில் தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் புதிதாக திறக்கப்பட்ட லுலுமாலில் சிலர் தொழுகை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்து அமைப்பு எதிர்ப்பு

இந்து அமைப்பு எதிர்ப்பு

அதாவது மால் திறக்கப்பட்ட 3வது நாளில் ஜூலை 12ல் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு அகில பாரத் இந்து மகாசபா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

விதிமீறல் என போலீசில் புகார்

விதிமீறல் என போலீசில் புகார்

இதுபற்றி அந்த அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் சிசிர் சதுர்வேதி கூறுகையில், ‛‛லுலுமாலில் சிலர் தொழுகை நடத்துகி்றனர். பொது இடத்தில் தொழுகை நடத்த அரசு தடை விதித்துள்ள நிலையில் இது விதிமீறலாகும். இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணை நடத்தி மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். மேலும், அந்த அமைப்பு சார்பில் சம்பவம் குறித்து லக்னோ போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மால் திறக்க பாஜக எதிர்ப்பு

தமிழகத்தில் மால் திறக்க பாஜக எதிர்ப்பு

முன்னதாக கடந்த மார்ச் மாதம் அரசு முறை பயணமாக துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி லுலு குழும நிர்வாக இயக்குனர் யூசுப் அலியை சந்தித்து பேசினார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. தமிழகத்திலும் லுலு குழுமம் ரூ.3500 கோடி முதலீட்டில் சென்னை, கோவையில் மால் திறக்க உள்ளது. இதற்கு தான் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். லுலுமால் திறக்கப்பட்டால் அது சிறு, குறு வணிகர்கள் மற்றும் சாதாரண வியாபாரிகளின் வணிகத்தை பாதிக்கும் என அவர் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் லுலுமாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+