ஒரே ரயில்.. ஸ்ட்ரைட்டா காசி - தமிழ்நாடு போகலாம்.. பேர்லதான் ட்விஸ்ட்! அடேங்கப்பா.. ரூ.7,000 கோடியா?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக விரைவில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு 75 வது இந்திய சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வருகிறது.
இந்துக்களின் புனித தளமாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள பண்பாட்டு தொடர்பை விளக்கம் விதமாக வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தி வரும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை கடந்த நவம்பர் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

தமிழ் மாணவர்கள்
இந்தியாவில் உள்ள கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை, கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

சிறப்பு ரயில்கள்
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 13 சிறப்பு ரயில்கள் காசிக்கு தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 2,592 பேர் இந்த சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொண்டர். இதில் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்தவர்களும் சென்று உள்ளனர்.

விமர்சனங்கள்
தமிழ் என்ற பெயரில் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மதபிரச்சார நிகழ்வை போல் நடத்தப்பட்டு வருவதாகவும், இது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காகவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக திமுக, திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

புதிய ரயில்
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் காசி தமிழ்நாடு இடையே புதிய ரயில் சேவை கொண்டு வரப்படும் என்று தெரிவித்து உள்ளார். காசி தமிழ் சங்கமத்தை கொண்டாடும் வகையில் அதன் பெயரும் காசி - தமிழ் சங்கமம் என்றே வைக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் அவர் பேசினார்.

வாரணாசி ரயில் நிலையம்
வாரணாசி ரயில்வே ஜங்சனை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். "அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து ரூ.7,000 கோடி மதிப்பில் வாரணாசி ரயில் நிலையத்தை சீரமைக்க உள்ளோம். இதன் மூலம் வாரணாசி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுவதுடன், இதன் அருகே இருக்கும் ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படும். வாரணாசி ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்படும்.












Click it and Unblock the Notifications