மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்த குற்றவாளி! பலாத்கார கேசில்.. 6 மாதங்களுக்கு பின் சிக்கிய சுவாரசியம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது செல்போன் மற்றும் பணப்பையை திருடிச்சென்ற இருவர் தற்போது காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்கள் திருடிச் சென்ற செல்போனே இவர்களை காட்டிக்கொடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது குறித்து நொய்டா காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஒரு நாள் இரண்டு பெண்கள் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து தங்களது அறையை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது சரியாக இரவு 9 மணி இருக்கும். மெயின் ரோட்டை ஒட்டிய சர்வீஸ் சாலையில் இவர்கள் நடந்து வந்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு பின்னால் இரண்டு பேர் பின்தொடர்ந்திருக்கின்றனர்.
தொடக்கத்தில் இது குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் பின்னர் சிறிது நேரம் கழித்து இவர்களை பின்தொடர்ந்தவர்கள் நெருங்கி வந்து இரு பெண்களின் வாயை பொத்தி கடத்த முயன்றுள்ளனர். இந்த முயற்சியில் ஒரு பெண் தப்பித்துள்ளார். மற்றொரு பெண் சிக்கிக்கொண்டுள்ளார். எனவே இவர்கள் ஒரேயொரு பெண்ணை மட்டும் வாயை பொத்தி கை கால்களை பிடித்து அருகில் உள்ள மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பலாத்காரம்
பின்னர் அங்கு வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பெண் கூறிய அடையாளத்தை வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டுபேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376D மற்றும் 392 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் நடந்து வந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமிராவை பரிசோதனை செய்ததில் இரண்டு ஆண்கள், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணையும் அவரது தோழியையும் பின்தொடர்ந்து வந்தது தெளிவாக தெரிந்தது.

விசாரணை
ஆனால் அவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்னர் எங்கு போனார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனவே இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல இரவு நேரம் என்பதாலும் சிசிடிவி கேமராவில் இவர்களது முகம் சரியாக பதிவாகவில்லை. இவ்வாறு அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குற்றவாளிகளை எங்களால் கைது செய்ய முடியவில்லை. இருப்பினும் இளம்பெண் சொன்ன அடையாளத்தை வைத்து சுமார் 150 நிறுவனங்களின் ஊழியர்களை சோதனை செய்து பார்த்தோம். ஆனால் எதிலும் இவர் சொன்ன ஆள் இருக்கவில்லை.

செல்போன்
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த செல்போன் வாண்டட் லிஸ்ட்டில் இணைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் யதார்த்தமாக தனது செல்போன் எண்ணிற்கு அழைத்து பார்த்துள்ளார். அப்போது ரிங் அடித்திருக்கிறது. இதனை எதிர்பார்க்காத அப்பெண் உடனடியாக எங்களை அணுக நாங்கள் அந்த செல்போனை டிரேஸ் செய்தோம். டிரேஸ் செய்ததில் இந்த மொபைல் உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் மாவட்டத்தில் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது.

இயல்பு வாழ்க்கை
மேலும், இதனை பயன்படுத்திய நபரையும் கைது செய்தோம். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவரது பெயர் ஜஸ்வந்த் தோமர் என்றும், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பகுதிக்கு அருகே டீக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று தோமரை சந்திக்க ஊரிலிருந்த இவரது மைத்துனன் அபய் பிரதாப் வந்திருக்கிறார். இருவரும் நன்றாக குடித்திருக்கிறார்கள். பின்னர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் எனில், இந்த குற்றத்திற்கு பின்னர் இவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

கைது
அதாவது தோமர் அதே டீக்கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அபய் மீண்டும் ஊருக்கு சென்று இயல்பாக இருந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அப்பெண்ணிடமிருந்து திருடிய செல்போனை 6 மாதங்களுக்கு பின்னர் சுவிட்ச் ஆன் செய்திருக்கிறார்கள். எனவே மாட்டிக்கொண்டனர்" என்று கூறியுள்ளனர். பொதுவாக காவல்துறையினர் செல்போனின் IMEI எண்ணை வைத்து தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போனை கண்டுபிடித்துவிடுவர். செல்போன் ஆன் செய்து அதில் வேறு ஒரு சிம் போட்டு பேசினாலும் கூட மாட்டிக்கொள்வார்கள். அதேபோல இன்டர்நெட் பயன்படுத்தும்போதும் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications