இந்தியா கூட்டணியை விட்டு தப்பி ஓடிய RLD: உ.பி.யில் 2 சீட் கொடுத்தது பாஜக- அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி!
லக்னோ: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட ராஷ்டிரிய லோக் தள் (RLD, ஆர்எல்டி) கட்சி ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சி திடீரென பாஜக கூட்டணிக்கு ஓடுவது சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
"இந்தியா" கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்தன. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு விவகாரம் இந்தியா கூட்டணியில் பெரும் பிரச்சனையாக வெடித்தது.

அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் ஓடிவிட்டார். இது இந்தியா கூட்டணியை திகிலடைய வைத்தது. பீகாரில் இந்தியா கூட்டணியின் கூட்டணி ஆட்சியை கைவிட்டுவிட்டு பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராகிவிட்டார் நிதிஷ்குமார்.
இதே பாணியில் உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராஷ்டிரிய லோக் தளமும் தற்போது முடிவெடுத்திருக்கிறது. இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு உ.பி.யில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் தற்போது ராஷ்டிரிய லோக் தள் கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருக்கிறதாம். மேலும் உபியில் 2 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுமாம். அப்படி பாஜக கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தள் இணைந்தால் மத்திய அமைச்சர் பதவி, மாநில அமைச்சர் பதவி, எம்.எல்.சி. பதவிகள் தரப்படும் என பாஜக தரப்பு உறுதி அளித்துள்ளதாம். இதனாலேயே ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பாஜக பக்கம் தாவலாம் என முடிவெடுத்துவிட்டாராம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், ஜெயந்த் சவுத்ரி அப்படி எல்லாம் முடிவெடுக்க மாட்டார் என நம்புகிறோம். இந்தியா கூட்டணியிலேயே நீடிக்கவே வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள், ராஷ்டிரிய லோக் தள் கட்சியானது பாஜக பக்கம் போவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணி தலைவர்களையும் காங்கிரஸையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications