Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக அஸ்திவாரத்தையே ஆட்டிடாங்களே.. பல லட்சம் கணக்கில் திரண்ட ராஜபுத்திரர்கள்.. உ.பி, குஜராத்தில் அடி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக க்ஷத்ரிய சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும்,

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.

Rajputs hold massive rally in Rajkot against BJP How Kshatriyas are turning against Lotus in Uttar Pradesh Gujarat

இப்பகுதியில் இப்போது சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. ராஜ்புட் உள்ளிட்ட சில ஆதிக்க சாதியினர் அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் காட்டி பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக ராஜபுத்திரர்கள், தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் குஜராத், உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

என்ன காரணம்: ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மணம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.

மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.

பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.

போராட்டம்: இதன் அடிப்படையில் நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக க்ஷத்ரிய சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும், ராஜபுத்திரர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்காக மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவின் வேட்புமனுவை எதிர்த்து ராஜ்கோட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ராஜ்புத் சமூகத்தினர் திரண்டனர்.

பாஜக உடனே இவரை நீக்கவில்லை என்றால், பாஜக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், எங்கள் ஜாதியில் இருந்து வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்றால் மிக கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என்று ராஜபுத்திரர்கள் முடிவு செய்துள்ளனர். பாஜகவிற்கு இந்த தேர்தலில் முடிவு கட்டுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து: முன்னதாக சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.

வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.

பஞ்சாயத்தில் பேசிய பேச்சாளர்கள், தங்கள் சமூகத் தலைவர்களுக்கு பாஜக அமைப்பிலும் பதவி வழங்கப்படவில்லை. சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் காவி கட்சியை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 16 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் சமூகத் தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து முடிவு செய்தது.

மேற்கு உ.பி.யின் சஹாரன்பூர், மீரட், முசாபர்நகர், பாக்பத், கைரானா, காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்ற பஞ்சாயத்துகள் சில நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்திலும் நடைபெற்றன. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலியானை எதிர்க்குமாறு சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.

குஜராத்தில் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு இணங்கி, அவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைத்ததாக ரூபாலா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமூகத்தின் பஞ்சாயத்துகள் முடிவு எடுத்த நிலையில் தற்போது சத்திரியர்கள் vs பாஜக மோதல் வடஇந்தியாவில் தீ போல பரவ தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+