சமூக நீதிக்கான போர்க்குரல் முலாயம்சிங் உடல் சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் தகனம்!
லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம்சிங்கின் உடல் அவரது சொந்த கிராமமான சைபாய் (சைஃபை) கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் முலாயம்சிங். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதான கட்சியாக திகழும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முலாயம்சிங் நேற்று காலை காலமானார்.

முலாயம் சிங் யாதவ் மறைவு சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போர்க்குரல் எழுப்பியவர். பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் முலாயம்சிங். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார். யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர். முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார். நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முலாயம்சிங் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முலாயம்சிங் யாதவ் மறைவுக்காக 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.
பின்னர் இன்று சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தின் சைபாய் கிராமத்துக்கு முலாயம்சிங் யாதவ் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. முலாயம்சிங் யாதவின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் துயருடன் பங்கேற்றிருந்தனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்ஜேடி தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்தி நடிகர் அபிஷேக் பச்சான், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, பிரமோத் திவாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முலாயம்சிங் யாதவின் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.சமாஜ்வாதி கட்சியினரால் நேதாஜி, மவுலானா என அன்புடனும் உரிமையுடனும் அழைக்கப்பட்ட முலாயம்சிங் யாதவின் உடல் தொண்டர்களின் கண்ணீர் கதறலுடன் தீக்கங்குகளில் சங்கமமானது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications