குப்பை லாரியை கூட விடுவதில்லை.. தோண்டி துருவி இ.வி.எம் மிஷின்களை தேடும் சமாஜ்வாதி தொண்டர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் குப்பை ஏற்றிச் செல்லும் வண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதா என்று சமாஜ்வாதி கட்சியினர் தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவிலேயே அதிக தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய 403 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு மையங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே பல்வேறு இடங்களில் பாஜகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்திச் செல்வதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் லாரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்திச் செல்லப்படுவதை சமாஜ்வாடி கட்சியினர் கையும் களவுமாக பிடித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டுள்ள கோரக்பூர் தொகுதியில் குப்பை ஏற்றிச் செல்லும் வண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சந்தேகமடைந்த சமாஜ்வாடி கட்சியினர் வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். ஆனால் அதில் இயந்திரங்கள் இல்லை.
சமாஜ்வாதி கட்சியினர் பைனாக்குலர் மூலமாக வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடங்களை தூரத்திலிருந்தும் கண்காணிக்கிறார்கள். இப்போது குப்பை லாரியையும் விடாமல் தேடி பிடித்து சோதனை போட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பான சூழ்நிலை, உத்தர பிரதேசத்தில் நிலவியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications