உ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் புதிய தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமித்ததன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை தக்க வைக்க முடியும் என கணக்குப் போடுகிறது பாஜக.
உத்தரப்பிரதேசத்தில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். அவரது நியமனங்களில் தாக்கூர் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பிற சமூகங்களில் அதிருப்தி ஏற்பட்டது.

குறிப்பாக பிராமண சமூகத்தினரிடையே இந்த அதிருப்தி அதிகமாக இருந்தது. இதனால் துணை முதல்வராக இருந்த மகேந்திரநாத் பாண்டேவை பாஜக தலைவராக அறிவித்தது. இது பிராமண சமூகத்தை சமாதானப்படுத்தியது. லோக்சபா தேர்தலிலும் இது எதிரொலித்தது,
லோக்சபா தேர்தலில் மகேந்திரநாத் பாண்டே வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது.
எம்.எல்.சியாக இருக்கும் லக்ஷ்மண் ஆச்சார்யா அல்லது எம்.பி மகேஷ் சர்மா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் குர்மி சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சுதேந்திரதேவ் சிங், பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை நியமித்திருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளைப் தக்க வைக்க முடியும் என்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் கணக்கு. மேலும் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications