பரபர உத்திரபிரதேசம்..3ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு தயார்..களமிறங்கும் அகிலேஷுக்கு கைகொடுக்குமா கர்ஹால்
லக்னோ : உத்திரபிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று ஓய்வு அடைந்துள்ள நிலையில், கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சத்பால் சிங் பாகேல் போட்டியிடுகிறார்.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு உபியில் முடிவடைந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

உத்திர பிரதேச தேர்தல்
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி. தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.

பாஜகவினர் உறுதி
2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இம்முறை 200க்கும் அதிகமான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்கின்றன கருத்து கணிப்புகள். களத்தில் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து 3ஆம் கட்ட தேர்தலை சந்திக்க பாஜகவினர் தயராகி வருகின்றனர். கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களை கைப்பற்றுவோம் என பாஜகவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.

3ஆம் கட்ட தேர்தல்
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் அதாவது 20ஆம் தேதி நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு நிலையில், அந்த பகுதிகளில் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையொட்டி இந்த தொகுதிகளில் இன்று பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

களம் காணும் அகிலேஷ்
நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ளனர். மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், அவரை எதிர்த்து பாஜக மத்திய அமைச்சரான சத்ய பால் சிங் பாகேல் பாஜக வேட்பாளராக போட்டியிருகிறார். இதனால் 3ஆம் கட்ட தேர்தலில் கர்ஹால் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications