காதலனுடன் கொஞ்சி குலாவிய மூத்த சகோதரி.. சட்டென வந்த சகோதரிகள்! அடுத்து நடந்த ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்த இரண்டு சகோதரிகளை மூத்த சகோதரி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் 7 மற்றும் 4 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் கத்தி போன்ற பொருளை கொண்டு கழுத்து துண்டிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

The incident of elder sister murdering the sisters when she saw them alone with her boyfriend has caused a shock

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகள் வளர்ந்த குடும்பம் மிகவும் ஏழ்மையானது எனவும், அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதிரிகள் யாரும் கிடையாது என்பதும் தெரிய வந்தது. அப்படி இருக்கையில் இந்த கொலை பாலியல் நோக்கத்திற்காக நடந்ததா? என்றும் சந்தேகம் எழுந்தது. ஆனால் உயிரிழந்த சிறுமிகளின் உடலில் பாலியல் சீண்டல், வன்கொடுமைக்கான எந்த தடயமும் இல்லை. இப்படியாக போலீஸை இந்த இரட்டைக்கொலை சுத்தலில் விட்டது.

ஒரு கட்டத்தில் போலீசார் குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவந்தன. அதாவது உயிரிழந்த சகோதரிக்கு மூத்த சகோதரியாக இருக்கும் அஞ்சலிக்கும், இதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞனுக்கும் காதல் இருந்து வந்தது. தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அஞ்சலி அந்த இளைஞனை அழைத்து அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கிறார். இந்த கொலை நடந்த நாளன்றும் இதேபோல நடந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் துருவி துருவி கேள்வியெழுப்பியதில் அஞ்சலி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், "கொலை நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வரை அஞ்சலி தனது காதலனுடன் தனிமையில் இருந்திருக்கிறார். இதை அஞ்சலியின் சகோதரிகள் பார்த்திருக்கிறார்கள். அவர் இதை எங்காவது வெளியில் சொல்லிவிடப்போகிறார்களோ என்கிற அச்சத்தில் இரண்டு சகோதரிகளையும் மண்வெட்டியை கொண்டு கொலை செய்திருக்கிறார். இதை மறைக்க மண்வெட்டி சுத்தமாக கழுவி வைத்திருக்கிறார். நாங்கள் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தபோது இதை கண்டுபிடித்தோம். அதேபோல அஞ்சலியின் துணிகள் துவைத்து காயவைக்கப்பட்டிருந்தன. இதுவும் எங்களது சந்தேகத்தை உறுதி செய்தது. துணியில் ரத்த கறை படிந்திருந்ததால்தான் துணி துவைக்கப்பட்டிருப்பதாக அஞ்சலி ஒப்புக்கொண்டார்" என்று கூறியுள்ளனர்.

காதலனுடன் தனிமையில் இருந்ததை சகோதரிகள் பார்த்ததால் அவர்களை துடிக்க துடிக்க மூத்த சகோதரி கொலை செய்தது உத்தரப் பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+