நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய உ.பி போக்குவரத்து துறை! சாதித்து காட்டிய யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கடந்த ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்து துறை தற்போது உபரி வருவாயை ஈட்டியிருப்பதாக உத்தரப் பிரதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "முந்தைய ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய துறைகளை லாபத்திலும் இயங்க வைக்க யோகி ஆதித்யநாத் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிருக்கிறார். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தற்போது இந்த துறைகள் உபரி வருவாயை பெற்றிருக்கின்றன. உதாரணமாக போக்குவரத்து கழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது கடந்த 2017க்கு முன்னர் கடும் வருவாய் நெருக்கடியில் சிக்கி தவித்தது.

The UP government has said that the transport sector, which was operating at a loss, has now started operating at a profit

ஆனால் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் நாங்கள் சில முடிவுகளை மேற்கொண்டோம். இந்த முயற்சிகள் நல்ல பலனை கொடுத்திருக்கின்றன. குறிப்பாக இந்த மாதம் போக்குவரத்து துறை ரூ.32 லட்சத்தை லாபமாக ஈட்டி இருக்கிறது. இதற்காக அரசு பேருந்துகளை நாங்கள் தொடர்ச்சியாக சோதனை செய்தோம், குறிப்பிட்ட வழித்தடத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது? கூடுதல் தேவை என்ன? காலையிலும், மாலையிலும் எத்தனை பேருந்துகள் கூடுதலாக தேவைப்படுகிறது? பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதா? பேருந்தின் தரம், நேர கட்டுப்பாடு என சுமார் ஒரு லட்சம் முறை நாங்கள் இதுவரை சோதனைகளை செய்திருக்கிறோம்.

அதேபோல டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 4901 பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முன்பதிவு செய்யப்படாமல் 172.4 டன் சுமை கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர 8,420 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் மது சோதனை நடத்தப்பட்டது. இப்படியான தொடர் நடவடிக்கைகள் காரணமாக தற்போது போக்குவரத்து துறை சீராக செயல்பட்டு வருகிறது. இந்நிலை நீடித்தால் விரைவில் போக்குவரத்து துறைக்கு நல்ல லாபம் கிடைக்கும்" என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+