காட்டு விலங்குகளின் தொல்லை இனி இருக்காது.. பயிர்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் அரசு புது முயற்சி
லக்னோ: மலையோரத்தில் பயிரிடும் விவசாயிகள் காட்டு விலங்குகளால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு புதிய யோசனைகளை அமல்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது மலை வாழ் மக்களையும், அவர்களின் வேளாண் பயிர்களையும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைப்பதும், கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு 'அமரித் 1.O' எனும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். தற்போது வரை மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் சுமார் 8.7 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் வீடுகள் பாக்கி இருக்கின்றன. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதேபால மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த வசதிகள் விரிவாக்கப்படும்.
'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் விளைபொருட்கள் பாதுகாக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1.43 லட்சம் மானியமாக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் வரைவு வேளாண் துறையால் தயாரிக்கப்பட்டு, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க 12 வோல்ட் மின்னோட்டத்துடன் கூடிய சூரிய மின் வேலி அமைக்கப்படும். இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ரூ.75 கோடியில் இருந்து ரூ.350 கோடியாக உயர்த்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சோலார் கம்பி வேலி விலங்குகளுக்கு லேசான அதிர்ச்சியைக் கொடுக்கும், அவைகளுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. ஏதாவது ஒரு விலங்கு வேலியைத் தொட்டால் உடனே சைரன் ஒலிக்க தொடங்கிவிடும். இதனால் விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடிவிடும். இது விவசாயிகளின் பயிர்களை நிச்சயம் பாதுகாக்கும்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications