சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்குகிறார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பாக பணியாற்றிய 75 ஆசிரியர்களுக்கு அம்மாநில அரசு விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது. வரும் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்று விருதுகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்குகிறார்.
உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்வித் துறையானது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா ஒருவர் என 75 ஆசிரியர்களை சிறந்த ஆசியர்களாக தேர்வு செய்திருக்கிறது.இவர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்து விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 75 ஆசிரியர்களில் 40 பேர் பெண்கள் மற்றும் 35 ஆண்கள்.

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுவதற்கு புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தியதற்காக இவர்கள் சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான லக்னோவைச் சேர்ந்த நீதா யாதவ் கூறுகையில்,
"2008ம் ஆண்டில் நான் மஹ்மூத்பூர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தேன். இப்பள்ளியில் 2013ம் ஆண்டிலிருந்து இருந்து தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பள்ளியில் சேர்ந்தபோது 197 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது, எங்கள் பலம் 434 ஆக அதிகரித்துள்ளது. பள்ளியில் 8 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பயிற்றுவிப்பாளர் உள்ளனர். தற்போது எனக்கு சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பள்ளிக் கல்வியை பலப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விருது அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications