கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்குவதில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உ.பி! அசத்தும் யோகி அரசு
லக்னோ: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் இணைப்புகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இது குறித்து அம்மாநில அதிகாரிகள் கூறியதாவது, "உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவு கிராமங்கள் இருக்கின்றன. அதேபோல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இருக்கும் கிராமங்களை காட்டிலும் இங்கு உள்ள கிராமங்கள் அருகருகே இல்லாமல் தொலைவில் இருக்கின்றன. எனவே இந்த பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை கொண்டு சேர்ப்பதில் கடும் சிரமம் இருந்தது. ஆனாலும் நாங்கள் இந்த சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் எங்கள் கடமையை செய்தோம்.

நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு இடர்பாடுகளை கடந்து சுமார் 1.12 கோடி வீடுகளுக்கு நாங்கள் குடிநீர் இணைப்புகளை கொடுத்திருக்கிறோம். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புற வீடுகளில் 50%க்கும் அதிகமான வீடுகளுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு தினமும் குடிநீர் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உ.பி தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல படௌன், ஷ்ரவஸ்தி, லக்னோ, காஸ்கஞ்ச், கான்பூர் தேஹாத் மற்றும் சாந்த் ரவிதாஸ் நகர் ஆகியவை நீர் இருப்பை உறுதி செய்வதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது எங்கள் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதிதான். ஏற்கனவே வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் இந்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. முன்பு இந்த மாநிலத்திலிருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக வெளியேறினார்கள். ஆனால் தற்போது மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் அதிகம் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு குறு தொழில்கள் அதிகம் உள்ள மாநிலம் உ.பிதான். எனவே இந்த தொழில் முனைவோர்களுக்கான ஆதரவை அளிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியடையும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
மறுபுறம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முயற்சியால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு. இந்த மாநாடு மூலம் ரூ.32 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் மாநிலத்திற்கு வர இருக்கிறது. எனவே இந்த முதலீடுகள் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். மட்டுமல்லாது இதன் மூலம் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.
இது மாநிலத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி உயர்த்தும். இந்த தொழில் வளர்ச்சிக்கு சமமாக பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சமூக வளர்ச்சியும் மேம்படுத்தப்படும்" என்ற கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications