அகிலேஷ் கட்சியில் அடுத்தடுத்து OBC தலைவர்கள்... 2017-ல் பாஜக ஜெயிக்க காரணமான அதே வியூகம்தான்!
லக்னோ: 2017 சட்டசபை தேர்தலில் OBC எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளை ஒரேயடியாக அள்ளியதால் பாஜக இமாலய வெற்றியைப் பெற்றது. தற்போது பாஜகவின் வெற்றிக்கு காரணமான அந்த இதர பிற்படுத்த சமூகங்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் பக்கம் தாவி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் 47 மட்டுமே. 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் 4 இடங்கள் குறைவு.
ஆனால் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 312 இடங்களைப் பெற்றது. முந்தைய தேர்தலைவிட 265 இடங்கள் கூடுதலாக வென்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது பாஜக. அந்த கட்சியினர் கூட இவ்வளவு மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

2017-ல் அகிலேஷ் கட்சி நிலைமை
2017-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சியானது மிக மோசமான உட்கட்சி பிளவுகளை எதிர்கொண்டிருந்தது. அந்த தருணத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஏகப்பட்ட தொகுதிகளை வாரி கொடுத்தது சமாஜ்வாதி கட்சி. இதனால் உ.பி.யில் நம்பிக்கைக்குரிய கட்சிகளாக அப்போது எதுவும் தென்படாததால் பாஜக வாக்குகளை எளிதாக அள்ளியது. பாஜகவுக்கு அப்போது கை கொடுத்தது இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகள்தான்.

பாஜக ஜெயித்தது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-வது பெரிய சமூகம் மெளரியாக்கள். அச்சமூகத்தின் அரசியல் முகங்களாக இருந்தவர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, ஸ்வாமி பிரசாத் மவுரியா. கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வராக இருக்கிறார். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஸ்வாமி பிரசாத் மவுரியா, பாஜகவை விட்டு வெளியேறி அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்துள்ளார். ஸ்வாமி பிரசாத் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக தன்னை வளர்த்துக் கொண்டவர். அதனால்தான் அவரது விலகல் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெருந்தலைகள் அணி மாற்றம்
ஸ்வாமி பிரசாத் மவுரியாவை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிரஜேஷ் பிரஜாபதி, லோத் எனும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ரோஷன் லால் வர்மா, மவுரியா சமூகத்தைச் சேர்ந்த வினய் சாக்யா, தலித் சமூகத்தை சேர்ந்த பகவதி சாகர் என பெருந்தலைகள் அத்தனை பேரும் இப்போது அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்திருக்கின்றனர். இதேபோல் 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு நோனியா எனும் ஓபிசி சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து கொடுத்த தாராசிங் சவுகானும் இப்போது அக்கட்சியை விட்டு வெளியேறி அகிலேஷ் கரத்தைப் பலப்படுத்தி இருக்கிறார்.

கணிப்புகள் தலைகீழாகும்?
இப்போது உ.பி. தேர்தல் களத்தில் அகிலேஷ் யாதவின் பின்னால் யாதவ சமூக வாக்குகள் மட்டுமல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பெரும்பான்மையானவற்றின் வாக்குகளும் அணிதிரட்டப்பட்டுள்ளன. இந்த திடீர் அணி மாற்றமானது உ.பி. தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை தலைகீழாக புரட்டிப் போடப் போகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 2017-ல் பாஜக வென்ற 312 இடங்களில் ஆகக் குறைந்தது 100 இடங்களை அக்கட்சி இம்முறை இழக்கும் என்பதுதான் கருத்து கணிப்புகள் சொல்லி வருகின்றன. இப்போது ஓபிசி சமூக வாக்குகள் அப்படியே அகிலேஷ் கட்சிக்கு மடைமாறுகிறது. இதனால் பாஜகவுக்கு மிகப் பெரும் பின்னடைவும் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியங்களையும் இது ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications