அடடே சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் யோகி.. உ.பியில் வேற லெவலில் வளரும் எம்எஸ்எம்இ தொழில்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை வளர்க்கும் விதமாக 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல் அதிகாரிகள் பதவிகள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் தற்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக யோகி ஆதித்தயநாத் கூறியுள்ளார். எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டிவிட வேண்டும் என்பதே தற்போதய திட்டமாகும். இந்நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதற்கட்டமாக ஆண்டின் தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் மாநிலத்தில் முதலீடுகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் முடிவெடுத்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கல்வி, சுகாதாரம், தொலைத்தொடர்பு, அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு என 10 துறைகளை சிறப்பாக வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சிறுகுறு தொழில்கள் மீது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் இந்த தொழில்களை வளர்த்தெடுக்க 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல் அதிகாரிகள் பதவிகள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் தற்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அடுத்து செயல்முறை தேர்வுக்கு தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ள எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. எழுத்துத் தேர்வில் 300 முதல் 400 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு செயல்முறை தேர்வு நடத்தப்படும். இது மே மாதத்தில் முடிவடையும். இதனையடுத்து 105 அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள MSME துறைசாார்ந்த அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
இவர்களின் பிரதான பணி, மாநிலம் முழுவதும் சிறு குறு மற்றம் நடுத்தர தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கடன்களை வழங்குவதாகும். இந்த தொழில்களை வளர்ப்பதன் மூலம் மாநிலம் முழுவதும் கணிசமான அளவில் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும். இது மொத்த பொருளாதாரத்தை உயர்த்த வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் இலக்கை எட்ட பெரிய அளவில் உதவி செய்யும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications