பல்லிளிக்கும் தேச பக்தி.. CRPF வீரரை புரட்டிய எடுத்த காவி உடையில் வந்த பக்தர்கள்! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் சீருடையில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரை காவி உடையில் வந்த கன்வாரியாக்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 7 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வடமாநிலங்களில் கன்வாரியா யாத்திரை என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், பக்தர்கள் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். வெறும் கால்களில் பல நூறு கி.மீ வரை நடந்து சென்று கங்கையில் இருந்து புனித நீரை கொண்டு வருவார்கள்.

இந்த நீரை கொண்டு, தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அர்ச்சனை செய்வார்கள். இந்த பயணத்திற்கு கன்வாரியா யாத்திரை என்றும், இதை மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த கன்வாரியாக்களுக்கும், சிஆர்பிஎஃப் படை வீரருக்கும் இடையே நேற்று நடந்துள்ள மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பியின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக கன்வாரியாக்களுக்கும் சிஆர்பிஎஃப் படை வீரருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. இந்த மோதலில் பக்தர்கள், படை வீரரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
A shocking assault on a uniformed CRPF jawan by saffron-clad Kanwariyas at Mirzapur railway station in Uttar Pradesh has led to the arrest of seven pilgrims. The incident, which occurred during the annual Kanwar Yatra, raises serious concerns about security of armed forces personnel and pilgrim violence.வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் 4 பேர் சிறார்களாவார்கள். இவர்களுக்கு சீருடையில் இருக்கும் வீரரரை தாக்குவதற்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? எப்படி தாக்க முடியும்? பிரச்சனை எனில் பேசி தீர்த்திருக்கலாம், புகார் அளித்திருக்கலாம். இதை மீறி எப்படி தாக்குதல் நடந்தது? இவர்களுக்கு யார் தாக்குதல் நடந்த அனுமதி கொடுத்தது? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட வீரர் பணி நிமித்தமாக மணிப்பூருக்கு சென்றுக்கொண்டிருந்தார். பிரம்மபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க மிர்சாபூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்ததாகவும், அங்கு கன்வாரியாக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சோகம் என்னவெனில், தாக்குதலுக்கு உள்ளான வீரர், அவர் மகனுடன் இருந்தார். தனது தந்தையை மகன் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் சமரசம் செய்வது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications