லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. உன்னாவில் கை, கால்களை கட்டி, தலித் சிறுமிகள் கொடூரமாக படுகொலை.. ஒரு சிறுமி உயிர் ஊசல்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தின் உன்னாவ்வில் உள்ள ஒரு வயலில் கை கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 3 தலித் சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்..

அவர்களில் 2 பேர் இறந்துவிட்டனர். உயிருக்கு போராடும் ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தின் உன்னாவோவில் இன்று (புதன்கிழமை) ஒரு வயலில் மூன்று சிறுமிகள் மயங்கி நிலையில் கிடந்தார்கள். கால்நடைகளுக்கு தீவனம் பொறுக்க சென்றிருந்த சிறுமிகளை மர்ம நபர்கள் அடித்துக் கொடூரமாக தாக்கி உள்ளார்கள்.

ஒரு சிறுமி படுகாயம்

ஒரு சிறுமி படுகாயம்

மூன்று சிறுமிகளை அவர்களின் உடைகளாலோயே கை மற்றும் கால்களை கட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சிறுமிகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துவிட்டனர். ஒரு சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சந்தேகம் இல்லை

சந்தேகம் இல்லை

இது தொடர்பாக சிறுமிகளின் குடுமபத்தினர் கூறுகையில், தீவனம் எடுப்பதற்காக சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சரியான நேரத்தில் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவர்களைத் தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் தேடிய போது, 3பேரும் சொந்த ஆடைகளால் கை கால்கள் கட்டப்பட்டு ஒரு வயலில் தூக்கி கிடந்தனர். எஙகளுக்கு யாருடனும் மோதல் இல்லை. யாரையும் நாங்கள் சந்தேகிக்கவில்லை என்றார்கள்.

மூளையில் பாதிப்பு

மூளையில் பாதிப்பு

இதனிடையே காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமியின் நிலை குறித்து பேசிய மருத்துவர், மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சிறுமி விஷம் குடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்கள். இந்த வழக்கு விசாரணை நடத்தி வரும் போலீசார் குற்றவாளிகளை தப்ப விட மாட்டோம். நிச்சயம் தண்டிப்போம் என்றார்கள்.

கோரிக்கை வலுத்தது

கோரிக்கை வலுத்தது

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருந்தது. அந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் அதே உன்னாவில் படுகொலை சம்பவம் நடந்திருப்பது ஆளும் யோகி ஆதித்யாநாத் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது

English summary
Three girls were found in Unnao, Uttar Pradesh on Wednesday. Two of the girls were found dead while one is injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X