உ.பி சட்டசபைத் தேர்தலில் பாஜக புது வியூகம் - ஜாட் சமூக தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்திய அமித்ஷா
ஜாட் சமூகத்தின் முக்கிய தலைவர்களை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்க பாஜக புது வியூகம் வகுத்துள்ளது.
ஜாட் சமூகத்தின் முக்கிய தலைவர்களை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றாலும் ஜாட் விவசாயிகளின் கோபம் அடங்கியபாடில்லை. சட்டசபைத் தேர்தலில் தனது தொகுதிகளை தக்கவைக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஜாட் சமூகத்தின் முக்கிய 250 தலைவர்களை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இது உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மேற்குப்பகுதி தொகுதிகளை தக்கவைக்கும் பாஜகவின் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழுகட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகதான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் உறுதியாக சொன்னாலும் அதை நம்பி அசால்டாக இருக்க பாஜக நினைக்கவில்லை. வெற்றிக்காக முழு முயற்சியோடு போராடி வருகிறது.

ஜாட் சமூக வாக்குகள்
உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதே பகுதிகளில் உள்ளிட்ட 58 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 116 தொகுதிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.

ஜாட் சமூக ஆதரவு
மேற்குப்பகுதி ஜாட் சமூகத்தின் வாக்குகள் அதன் ஆதரவுக் கட்சியான முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்து வந்தன. இந்த நிலை, முதல்வர் முலாயம்சிங் தலைமையிலான ஆட்சியில் 2013ஆம் ஆண்டில் இல் நிகழ்ந்த முசாபர்நகர் மதக்கலவரத்தால் மாறியது. கடந்த 2014 முதல் ஜாட் சமூகத்தின் ஆதரவை பாஜக அதிகமாகப் பெறத் துவங்கியது. இது 2017 சட்டப்பேரவை தேர்தலிலும், 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தொடர்ந்தது.

ஆட்சி அமைக்கக் காரணம்
இம்மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்த தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றி கிடைத்தது. பாஜகவிற்கு மேற்குப்பகுதியில் மொத்தம் 92 தொகுதிகள் கிடைத்தன. உத்தரபிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பாஜக மீது எதிர்ப்பு
ஜாட் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இதன் காரணமாக, டெல்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2021 நவம்பர் வரை ஒரு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உத்தரபிரதேசத்தின் மேற்குப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் ஆதரவு கிடைத்தது. ஜாட் சமூகத்தினரின் இந்த ஆதரவால் மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜக மீது பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

மூன்று வேளாண் சட்டங்கள்
மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றாலும் ஜாட் விவசாயிகளின் கோபம் அடங்கியபாடில்லை. விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் ஜாட் சமூகத்தினர் தங்களை எதிர்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பாஜக வேட்பாளர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. எனவே கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனது தொகுதிகளை இந்த சட்டசபைத் தேர்தலில் தக்கவைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வியூகம் வகுத்து வருகிறது.எனவே, ஜாட் சமூகத்தினரை எதிர்ப்பை சமாளிக்க, அவர்களை நேரில் பேசி சமாளித்து ஆதரவை தக்கவைக்க பாஜக முயல்கிறது.

பாஜக வியூகம்
ஜாட், முஸ்லிம்கள் அதிகமுள்ள மேற்கு உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருப்பது பாஜகவுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் புது வியூகத்தினை பாஜக வகுத்துள்ளது.

ஆதரவை தக்க வைக்க அமித்ஷா முயற்சி
உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதி மாவட்டங்களிலிருந்து முக்கிய ஜாட் தலைவர்கள் தங்கள் செலவில் சிறப்பு வாகனங்களில் டெல்லிக்கு பாஜக வரவழைத்தது. 'சமாஜிக் பைஜாரா சம்மேளன்' அதாவது சமூக சகோதரத்துவக் கூட்டம் என்ற பெயரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜாட் சமூகத்தினரின் 250க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களுடன் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரான அமித்ஷா பேசியுள்ளார்.

பாஜகவின் சமாதானம் கை கொடுக்குமா?
பாஜக எம்.பியான பிரவேஷ் வர்மாவின் அரசு குடியிருப்பில் நடைபெற்ற சமூக சகோதரத்துவக் கூட்டத்தில் ஜாட் சமூகக் கூட்டங்களில் வழக்கமாக இடம்பெறும், ஹுக்கா மற்றும் வெல்லங்களில் செய்த இனிப்புகளுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது மார்ச் 10ஆம் தேதி தெரியவரும்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications