உபி சட்டசபைத் தேர்தல் 2022: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு - களத்தில் 613 வேட்பாளர்கள்
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 54 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இன்றைய தினம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உ.பி மாநில சட்டசபைத் தேர்தல்
அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தது. 2வது கட்ட ஓட்டுப்பதிவு 14ஆம் தேதியும், 3 வது கட்டம் ஓட்டுப்பதிவு 20ஆம் தேதியும், 4வது கட்டம் 23ஆம் தேதியும், 5 வது கட்டம் 27ஆம் தேதியும், 6 வது கட்டம் மார்ச் 3ஆம் தேதியும் நடந்து முடிந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

7ஆம் கட்ட வாக்குப்பதிவு
பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

நக்சல்கள் ஆதிக்கம்
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 5 மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications