மாபியாக்களுக்கு அடைக்கலம்... பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்... போட்டு தாக்கிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: பயங்கரவாத செயல்களின் தாயாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது; கடவுள் ராமரை அவமதிக்கிறது; மாபியாக்களுக்கு அடைக்கலம் தருகிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆன்டு நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது.
உ.பி. தேர்தலை எதிர்கொள்ள பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் என ஒரு பெரும் படையையே பாஜக மேலிடம் களம் இறக்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் உ.பி. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்காக வளர்ச்சி திட்டங்கள்
இதனிடையே உ.பி.யின் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். ரூ.400 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ126 கோடியில் சாந்த் கபீர் நகரில் கட்டப்பட்ட சிறைச்சாலையையும் நேற்று யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்
இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உ.பி.யை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை மாநிலத்தை இருளில் தள்ளிவிட்டன. மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அந்த அரசுகள் வழங்கவில்லை. நாட்டின் அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் தாயாக இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அவர்களால் 2 இடங்களில் கூட வெல்ல முடியாது.

எதிர்க்கட்சிகள் மீது சாடல்
உ.பி.யில் கடவுள் ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இன்று தாலிபான்களை ஆதரிக்கின்றனர். ஜாதியவாதத்துடன் குடும்ப அரசியல் செய்யும் அந்த சக்திகளை உ.பி. மக்கள் ஏற்கமாட்டார்கள். உ.பி.யில் நோய்களையும் வேலைவாய்ப்பையும் மாஃபியா ஊழல் காட்டாட்சியையும் கொண்டு வந்தவர்கள்தான் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்.

காங். எதிர்காலம்?
ஆனால் பாஜகவோ, மாஃபியாக்களை இருக்க வேண்டிய இடத்தில் முடக்கி வைத்துள்ளது. பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுகிறது. மக்கள் மனங்களில் பாஜக இடம்பிடித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஏழு இடங்களைக் கூட பெற முடியவில்லை. இந்த தேர்தலில் 2 பேர் கூட ஜெயிக்க மாட்டார்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
-
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications