அயோத்தியில் களைகட்டும் தீபாவளி.. 24 லட்சம் அகல் விளக்கு ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் சுமார் 24 லட்சம் அகல் விளக்குகள் இன்று மாலை ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட இருக்கிறது. இதற்காக உ.பி அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று அயோத்தியில் 24 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக கோயில் நகரமான அயோத்தியில் தீபோத்சவ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது அயோத்தி முழுவதும் சுமார் 24 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட இருக்கிறது. இதில் மொத்தம் 25 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். எத்தனை விளக்குகள் ஏற்றப்படுகிறது? என்பதை ட்ரோன் கேமராக்கள் கண்காணிக்கும். இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ உ.பியின் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள்.
மாலை நடைபெறும் இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய அயோத்தி ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பிரவீன் குமார், "அப்பகுதி 14 போலீஸ் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியும் பெற்றுள்ளோம். கூட்டமும் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல கடந்த ஆண்டும் அயோத்தியின் சரயு நதிக்கரையில் சுமார் 20 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று 15 லட்சம் விளக்குகளை ஏற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications