கியாரே.. வேறு பெயர் வைக்காமல்.. அது என்ன "ஆபரேஷன் கங்கா?" அகிலேஷ் யாதவ் கேள்வி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தேர்தலை மனதில் வைத்து தான், உக்ரைன் மீட்பு பணிக்கு 'ஆபரேஷன் கங்கா' என பேர் வைத்ததாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி எண்ணப்பட இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தல் இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அகிலேஷ் யாதவ்
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''உக்ரைனில் போர் நடப்பதால், அங்கு பல இந்தியர்கல் சிக்கி உள்ளார்கள். எந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பற்றி பாஜக பேசுகிறது என்று தெரியவில்லை. ஆனால் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை இந்த அரசு மீட்கத் தவறிவிட்டது.

ஆபரேஷன் கங்கா
உக்ரைனில் இருக்கும் மாணவர்களை மீட்க மத்திய அரசு மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் கங்கா' என்று பெயர் வைத்திருக்கிறது. அந்த பெயர் எதற்காக வைத்தார்கள் என்று எங்களுக்கு தெரியாதா, உத்தரப்பிரதேச தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வாரணாசி தொகுதியை முன்னிறுத்தி இந்த 7ம் கட்ட தேர்தலை அவர்கள் சந்திக்கிறார்கள். வாரணாசி மக்களை கவரவே ஆபரேஷன் கங்கா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

சைக்கிள்
மேலும், உத்தரப்பிரதேசத்தில் நல்லாட்சி மலரவும், தொழில் வளர்ச்சி பெறவும் ஓட்டு மெஷினில் உள்ள சைக்கிள் சின்னத்துக்கு மறக்காமல் வாக்களிக்கவும். இன்று காலை முதல் பல இடங்களில் வாக்குப் பதிவு எந்திரம் கோளாறாக இருக்கிறது. இதனால் பல இடங்களில் மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று வருகிறார்கள் என சமாஜ்வதி கட்சி தெரிவித்துள்ளது.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வலுவாகவே இருக்கிறது. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு தங்கி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications