பாஜக பயப்படுகிறது.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் சதியை நிறுத்துங்கள்- அகிலேஷ் யாதவ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடக்கும் சதியை நிறுத்துங்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் விவரங்களை மாற்றம் செய்வதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த நிலையில், கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்தில் வரும் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வருத்தத்தில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை
நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறையீடு செய்தனர் எனவும், வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறியுள்ளார். இதற்கு முன்னர், வாக்கு எண்ணும் மையத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பைனாகுலருடன் சமாஜ்வாதி கட்சியினர் கூடியிருந்தனர்.

நேரலை
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை இணையத்தில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முக்கிய தொகுதிகளில் மக்கள் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்பியதுபோல வாக்கு எண்ணப்படும் போதும் நேரலையில் ஒளிபரப்பினால் வாக்கு எண்ணிக்கையின் மீது கட்சிகளுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என்றார்.

சதியை நிறுத்துங்கள்
சமாஜ்வாதி வெற்றி பெறும் என பாஜக பயப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடக்கும் சதியை நிறுத்துங்கள். வாக்கு எண்ணிக்கைக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இவிஎம் மெஷின் எடுத்துப் போனதற்காக, ஒரு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications