'தலித் கோட்டை..' ஆக்ராவில் மீண்டும் கொடிநாட்ட களமிறங்கும் பகுஜன் சமாஜ்.. மாயாவதி பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைநகர் என்று சொல்லப்படும் ஆக்ராவைக் கைப்பற்ற கடும் போட்டியிடுகின்றன பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள். தேர்தலிலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி தன்னுடைய பிரசாரத்தை ஆக்ராவில் துவங்கியுள்ளார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வரும் 10ம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் மார்ச் 10இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

இந்தியாவே உற்று நோக்கி வரும் உத்தரப்பிரதேச தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்ததுமே இந்த கட்சிகள் தங்கள் பிரசாரத்தை துவங்கிவிட்டன. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

 பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி

மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை. அதேபோல் எஸ்.சி மிஸ்ராவும் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 206 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

 பிராமண வாக்குகள்

பிராமண வாக்குகள்

2007 தேர்தலில், தலித் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு, பிராமண வாக்காளர்கள் கணிசமாக வாக்களித்ததும், பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற காரணமாக இருந்தது. ஆனால், உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத நிலையில், எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் மீண்டும் பிராமண வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. கடந்த 10 ஆண்டுகளில் சமாஜ்வாதி கட்சியிலும், பாரதிய ஜனதா கட்சியிலும் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி நம்புகிறது.

மாயாவதி

மாயாவதி

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்த மாயாவதி, இந்த தேர்தல் அறிவித்ததில் இருந்து அமைதியாகவே இருந்தார். பெரிய அளவில் எந்த பிரசாரத்துக்கும் போகவில்லை. எப்போதாவது செய்தியாளர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், முதன் முறையாக மாயாவதி பிரசாரத்துக்கு வந்திருக்கிறார். ஆக்ராவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்தார். 1000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும், மாயாவதியின் பிரசாரத்தைக் காண ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் ஆக்ராவில் திரண்டனர்.

 ஓடி ஒளியவில்லை

ஓடி ஒளியவில்லை

"உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும், நான் லக்னோவுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். எனது தாயார் இறந்த அடுத்த சில நாட்களிலேயே டெல்லிக்கு சென்று தேர்தல் வேலைகளில் ஈடுபட்டேன். ஆனால், இங்குள்ள சில ஊடகங்களோ பகுஜன் சமாஜ் மீது சாதிய வன்மத்தை கக்குகின்றன. தேர்தல் பிரசாரத்தில் இருந்து நான் ஓடி ஒளிந்து கொள்வதாக அவை பொய்களை பரப்பி வருகின்றன'' என்று பிரசாரத்தில் பேசினார் மாயாவதி.

 தலித் ஓட்டுகள்

தலித் ஓட்டுகள்

ஆக்ரா லோக்சபா தொகுதியில், கிட்டத்தட்ட 7.5 லட்சம் தலித் வாக்காளர்கள் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைநகர் என்று ஆக்ரா அழைக்கப்படுகிறது.பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியாக கூறப்படும் ஜாதவ் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் இங்கு அதிகம் உள்ளனர். கடந்த 2007 மற்றும் 2012 சட்டசபை தேர்தல்களில் ஆக்ராவிலுள்ள 9 இடங்களில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது பகுஜன் சமாஜ். ஆனால் 2017 தேர்தலில் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. தற்போதும் பாஜக அங்கு சரியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு போட்டி கொடுக்கும் விதத்தில் ஜாதவ் பிரிவினரையும் பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச தலித் தலைநகரைக் கைப்பற்ற இந்த இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+