'முடிந்தவரை போராடினோம்.. உபி தேர்தல் கருத்துக்கணிப்புக்கு பிறகு மனம் திறந்த பிரியங்கா காந்தி
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு பிறகு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியது.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 403 இடங்களில் ஒற்றை இலக்க வெற்றியை தான் பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை சந்தித்தது. கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியே கிடைத்தது. அதுவும் கடந்த 2017 தேர்தலில் ஒற்றை இலக்க வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.

பிரியங்கா காந்தி
இதையடுத்து உத்தரப்பிரதேச காங்கிரசை மீண்டும் கட்டமைக்க பிரியங்கா காந்தியை நியமித்தது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து, பிரியங்கா காந்தியும் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை புதிதாக கட்டமைக்கும் பணியில் இறங்கினார். இந்த தேர்தலிலும் அவர் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் அவருக்காக அதிக மக்கள் கூட்டம் கலந்துகொண்டது.

தேர்தல்
இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் இறங்கியது. மிகப்பெரிய வெற்றி கிடைக்காது என்றபோதிலும், கவுரவமான வெற்றிக்கு பிரசாரத்தை மேற்கொண்டது காங்கிரஸ். நேற்றுடன் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிந்தது. இதையடுத்து தேர்தல்லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சியும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 8-10 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

உழைப்பு
இதையடுத்து, பிரியங்கா காந்தி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''உத்தரப்பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம். தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 159 பெண் வேட்பாளர்களோடு கொண்டாட உள்ளோம். அவர்களை சிறப்பிக்க இதைவிட சிறந்த தருணம் எதுவும் இல்லை'' என்று தெரிவித்தார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications