உ.பி: முதல் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்- அகிலேஷ் ஆரூடம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்; சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக் தள் கட்சியே 50 இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

ஜாட்- முஸ்லிம்கள் இணைப்பு
கடந்த சட்டசபை தேர்தலின் போது மேற்கு உ.பி.யில் ஜாட்கள், முஸ்லிம்கள் மிக மோசமான மதமோதல்கள் காரணமாக தனித்தனியே ஒருமுகப்படுத்தப்பட்டனர். அப்போது பாஜகவுக்கு இது சாதகமாக இருந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் குறிப்பாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்ட களம், ஜாட்களையும் முஸ்லிம்களையும் பிணைத்திருக்கிறது.

ராஷ்டிரிய லோக் தள் கட்சி
மேற்கு உ.பி.யில் ஜாட்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கட்சியாக ராஷ்டிரிய லோக்தள் கட்சி இருக்கிறது. இந்த கட்சி இப்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் ஓபிசி சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கக் கூடிய பகுதி இது. இதனால் மேற்கு உ.பி. தேர்தல் களம், சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எங்களுக்கே மக்கள் ஆதரவு
இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணியையே உ.பி மக்கள் ஆதரிக்கின்றனர். நாங்கள் மக்களுக்கு அளித்து வரும் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
Recommended Video

பாஜகவுக்கு 8 இடங்கள்..
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை, ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் என உ.பி.யில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது. பாஜக எம்.எல்.ஏக்கள் செல்லும் இடங்களில் மக்கள் விரட்டியடிக்கின்றனர். உ.பி.யில் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதனையே இப்போது தேர்தல் களத்தில் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு உ.பி.யில் 58 தொகுதிகளில் 50-ல் எங்கள் கூட்டணி வெல்லும்; பாஜகவுக்கு 8 இடங்களே கிடைக்கும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications