இந்த 2 நகரங்கள்தான் டார்கெட்.. கும்பமேளாவுக்கு ரெடியாகும் உ.பி.. சுற்றுலா துறையில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை அடைய பாஜக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். அதன்படி பிரயாக்ராஜ் மற்றும் நைமிஷாரண்யாவை முக்கிய சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

உத்தரப் பிரதேசம்! பாஜகவுக்கு ஒரு முக்கியமான மாநிலமாகும். இந்த மாநிலத்தின் மொத்த மக்களவை தொகுதிகள் 80. நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் எம்பி சீட் அதிகம். அப்படி இருக்கையில், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த மொத்த சீட்களையும் கைப்பற்ற பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டது.

UP Government plans to make Prayagraj and Naimisaranya major tourist destinations by 2025

இது அம்மாநிலத்தில் பாஜக அரசு மீதான நம்பிக்கையை அதிகரித்தது. அதேபோல இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. காரணம் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடுதான். இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியதை போல இதற்கு முன்னர் வேறு எந்த பட்ஜெட்டிலும் இதுபோன்று நிதி ஒதுக்கப்பட்டதில்லை. அதேபோல கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு என 10 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இந்த துறைகளில் தலைக்கீழ் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே இந்த துறைகளில் என்னென்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதனையடுத்து புதிய திட்டம் குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தற்போது இதன் தொடர்ச்சியாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். அதாவது, தற்போது காசி மற்றும் அயோத்தில் உத்தரப் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கிறது.

UP Government plans to make Prayagraj and Naimisaranya major tourist destinations by 2025

இதைப்போலவே பிரயாக்ராஜ் மற்றும் நைமிஷாரண்யாவை பிரபலமான சுற்றுலாத்தலமாக மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது. இந்த இரண்டு இடங்களும் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட இருக்கின்றன. ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் என்பது நாடு முழுவதும் இருந்து 15 மாநிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இந்த 15 மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்து தலா இரண்டு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த நகரங்கள் சுற்றுலா நகரமாக மேம்படுத்தப்படும். இதற்கான நிதியை முழுக்க முழுக்க மத்திய அரசுதான் வழங்குகிறது. அந்த வகையில் பிரயாக்ராஜ் மற்றும் நைமிஷாரண்யாவை மேம்படுத்த முதல்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இது தவிர பிரயாக்ராஜ் நகரில் மட்டும் உ.பி அரசு சுமார் ரூ.2,500 கோடியில் 87 திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. எனவே இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் இந்த பகுதியில் வேலை வாய்ப்பு மற்றும் வருமான பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை எதிர்வரும் 2025ம் ஆண்டு கும்பமேளாவுக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று யோகி அதித்யநாத் யோசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+